ஆழ்மன அற்புத இரகசியம்

ஆழ்மன அற்புத இரகசியம்!

ஆசைகள் அடங்கிடா விசைகடல் சங்கமம்
அமர் இடம் அறியா மாயபிம்பம்
நினைவுகள் புதையுண்ட வேட்கை நகரம்
இலக்குகள் தேடும் அசுரனாய் ஆழ்மனம்

ஏவலுக்காய் காத்திருக்கும் விசுவாசப் பிசாசு
எய்ததை முடிக்கத் துடித்திடும் தனுசு
விதைக்கும் சிந்தனையை விவாதபின்றி விகர்ப்பமின்றி
விரும்பி பயிராக்கும் நிலக்கிழான் ஆழ்மனம்

களைத்த மூளை உறக்கப் பசியுடன்
இளைப்பாற எதையும் இழக்கத் துணியும்
சளைக்காமல் சீறும் சாரையாய் ஆழ்மனம்
ஆதங்க ஆசைகளை கனவில் மெய்ப்பிக்கும்

அகாத்தியம் அவநம்பிக்கை அபகாரம் அபத்தம்
ஆழ்மனம் சிதைக்கும் ஆலகாலவிசம்
தவம் தர்மம் தியானம் திவ்வியம்
புறத்தூண்டலாகி ஆழ்மனம் தளைக்கும்

ஆழ்மனக் கோட்டைக்குள் பிரவேசியுங்கள்
அரசனாய் அறுதியிட்டு ஆணையிடுங்கள்
அரிதானக் கட்டளைக்குக் உறுதியாய் விடைதரும்
அசாதாரண சூழலிலும் துரிதமாய் செயல்படும்

நாமே நம் விதியின் எஜமானன்
நாமே நம் ஆன்மாவின் ஏகதலைவன்
நம்பிக்கை எனும் ஆழ்மனதை நம்பினால்
நம் வாழ்க்கைப் புத்தகம் ஜெயமாகும்

அறியா ஆழ்மன அற்புத இரகசியம்
அறிந்துக் கையாளக் கற்றல் அவசியம்
அகத்துடன் பேசி வையுங்கள் வசியம்
அதீத வெற்றியை அதுதந்திடும் நிச்சயம்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (18-Jul-17, 8:16 pm)
பார்வை : 97

மேலே