பாரதியின் கவிதை எங்கிருந்து வந்தது

பாரதியின் கவிதை எங்கிருந்து வந்தது
இரவில்
நிலவின்
ஒளியின் நிழலில்
வீசிடும்
தென்றல் காற்றில்
உறங்கிட மனம்
மறுத்து
கேட்ட கேள்வி
"பாரதியின் கவிதை
எங்கிருந்து வந்தததென்று..."
உறவென்று
இவ்வுலகில்
ஏதும்
இல்லாவிடினும்
நீ
அனாதையில்லை
என்று
உரிமை கொண்டாடும்
கவிதைகள் கவிஞரின்
விலைமதிப்பில்லா
சொத்துகள்!
கோபம், மகிழ்ச்சி,
காதல், காயம்
ஏக்கம் என
உணர்வுகளை
புரிந்து,
வெள்ளி கொலுசின்
மணிகளை போல
எழுத்துக்களால்
கோர்க்கப்பட்டு
வெளிக்காட்டிடும்
அழகிய கோலம்
இந்த கவிதைகள்!
சிற்பியின் செதுக்கிய
சிற்பங்கள்
பேசிடாது.
ஓவியரின்
வண்ண ஓவியங்கள்
பேசிடாது.
ஆனால்
கவிஞனின் கவிதைகள்
உணர்வுகளை
பேசிடாமல் இருந்திடாது..!
கவிஞனின்
சிந்தனை
கரை தொலைத்து
கடலில் தவிக்கும்
பயணியை போல
தேடுகின்றது...
ஒவ்வொரு
கவிஞனின் தேடல்
முடிவடைவதில்லை!
எம் தந்தை
"பாரதியின் கவிதை
எங்கிருந்து வந்தது"
என்று தெரியும்வரை...!
By
நா.சதீஷ் குமார்