அய்யோ, என் மகள் பேரு மனைவி-யா

அய்யோ! என் மகள் பேரு மனைவியா?
◆◆◆◆◆◆◆◆◆◆●◆●◆◆◆◆◆●◆◆◆◆◆●●
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
வாடா நண்பா வெள்ளைச்சாமி. நல்ல இருக்கறயா?
😊😊😊😊😊
நான் நல்ல இருக்கறண்டா கண்ணப்பா. எங்க உன் மனைவி பொன்னி?
😊😊😊😊😊😊😊😊😊
பொன்னி கடைக்குப் போயிருக்கறா.
😊😊😊😊😊😊😊
சரி. நீ பெத்த உன் மனைவி எங்கே?
😊😊😊😊😊😊😊😊😊
ஏண்டா மடையா வெள்ளை, ஒருத்தன் தன் மனைவிக்குத் தந்தையா இருக்க முடியுமா? உனக்கு பைத்தியமா இல்ல ஏழரை நாட்டுச் சனி பிடிச்சு ஆட்டி வைக்குதா?
😊😊😊😊
நான் நல்ல மனநிலையிலதான் இருக்கறன். ஏழரை எட்டரையெல்லாம் என்னப் பிடிக்க வாய்ப்பில்லை. நீ பெத்த உஞ் செல்ல மனைவி எங்க? இதுக்கு பதில் சொல்லுடா.
😊😊😊😊😊😊
டேய் மடப்பயலே, உன்ன நெருங்கிய
நண்பன்னும் பாக்கமாட்டேன். இன்னோரு தடவ அந்தக் கேள்வியக் கேட்ட உம் மூஞ்சில குத்தி உம் மொகறையைப் பேத்திருவேன். சாக்கிரதை.
😊😊😊😊😊
மன்னிச்சுக்கடா கண்ணப்பா. உன்னோட மகள் பார்யா (Bharya)* எங்கடா?
😊😊😊😊😊😊😊
பார்யா, அவ மாமா வீட்டுக்குப் போயிருக்கா.
😊😊😊😊😊😊😊
சரி 'பார்யா' -ங்கற பேருக்கு என்னடா அர்த்தம்?
😊😊😊😊😊😊😊
இந்தக் காலத்தில யாருடா அர்த்தம் தெரிஞ்சுட்டு பேருங்கள பிள்ளைங்களுக்கு வைக்கறாங்க? நாம நம்ம பிள்ளைங்களுக்கு வைக்கற பேரு தமிழ்ப் பேரா இருக்கக் கூடாது. இதுதாண்டா தற்காலத் தமிழர்களின் பெயராசை.
😊😊😊😊😊
நீ சொல்லறதும் சரிதாண்டா கண்ணப்பா. பெரிய பெரிய படிப்புப் படிச்ச தமிழர்களே அவுங்க பிள்ளைங்களுக்கு தமிழ்ப் பேருங்கள வைக்கறதில்ல. நாம சாதாரண தொழிலாளிங்க. தீவிர சினிமா ரசனை உள்ளவங்க. படிச்சவங்க போற வழில போறதுதாண்டா நமக்கு கவுரவம். சரி, 'பார்யா' -ங்கற பேர உம் பொண்ணுக்கு வைக்கச் சொல்லி யாருடா சொன்னது?
😊😊😊😊😊
அட வெள்ளைச்சாமி, நான் ஆட்டோ ஓட்டிட்டு போறப்ப சில மலையாளிங்க சாலையில நின்னுட்டிருந்தாங்க. அவுங்கள்ல ஒருத்தரு கைய எதிர் திசையில காட்டி அங்க வந்திட்டிருந்த சுமார் இருபத்தஞ்சு வயசுள்ள பொண்ண சுட்டிக் காட்டி "அவதன்னே என்டா பார்யா, அவதன்னே என்டா பார்யா" -ன்னு சொன்னாரு. பிள்ளைங்களுக்கு ஆர்யா, சூர்யா-ன்னு பேரு வைக்கற மாதிரி 'பார்யா' -ங்கறது அந்தப் பொண்ணு பேரா இருக்கும்னு நெனச்சுட்டேன். அதுக்கு அடுத்த வாரம் எம் மகள் பொறந்தா. பொன்னி சம்மதத்தோட எஞ் செல்லத்துக்கு 'பார்யா' -ன்னு பேரு வச்சுட்டோம்.
☺☺☺☺☺☺
வடிகட்டின முட்டாள்டா நீ. நாங்க போன வாரந்தான் கேரளாவுக்கு சுற்றுலாப் போயிட்டு வந்தோம். 'பார்யா' -ங்கற சொல் பல தடவை எங் காதில விழுந்தது. அந்தச் சொல்லுக்கு என்ன அர்த்தம்னு தமிழ்த் தெரிஞ்ச மலையாளிகிட்டக் கேட்டேன். "பார்யா' -ன்னா 'மனைவி' -ன்னு அர்த்தம்னு சொன்னாரு.
☺☺☺☺☺☺
அய்யோ தெய்வமே சபரிமலை அய்யப்பா, நான் பெத்த செல்ல மகள் பேரு 'மனைவி' -யா? அய்யோ எம் மகள் பேருக்கு 'மனைவி' - ன்னு அர்த்தம்ங்கறது சனங்களுக்குத் தெரிஞ்சா எம் மூஞ்சில காறித் துப்புவாங்களே நான் என்னடா செய்வேன். நீயே சொல்லுடா வெள்ளைச் சாமி.
😊😊😊😊😊😊
பதட்டப்படாதடா கண்ணப்பா. நீயும் பொன்னியும் உங்களுக்குப் பிடிச்ச ஒரு அர்த்தம் தெரிஞ்ச பேர முடிவு பண்ணீட்டு ஒரு வழக்குரைஞரப் பாருங்க. அவுரு உங்க பொண்ணு பேர மாத்தறதுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வாரு.
😊😊😊😊😊😊
ரொம்ப நன்றிடா வெள்ளைச்சாமி.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆●◆◆◆◆●◆
சிரிக்க அல்ல. சிந்திக்க.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
* Bharya = wife.

எழுதியவர் : மலர் (19-Jul-17, 5:56 pm)
பார்வை : 285

மேலே