சாணுக்கு சாணுசு

ஏண்டப்பா திமிலு, அங்க வெளையாடிட்டு இருக்கற பசங்கெல்லாம் 'இப்ப சாணுக்கு சாணுசு" குடுக்கணும்" ன்னு சொல்லறாங்களே அதுக்கு என்னடா அர்த்தம்?
😊😊😊😊😊😊
எனக்கு ஏம்மா 'திமில்' -ன்னு பேரு வச்ச்சீங்க.
😊😊😊😊😊
அட நீ அஞ்சு வயசா இருக்கும் போது ஒரு கண்ணுக்குட்டியோட திமிலப் பிடிச்சு அடக்கன வீரன்டா நீ. அந்த சாணுக்கு....?
😊😊😊😊😊
அம்மா...
😊😊😊😊
சரி சொல்லுடா திமிலு.
😊😊😊😊😊
அங்க வெளையாடற பசங்கள்ல ஒருத்தம் பேரு ஜான். அவனத்தான் நீங்க சாணுன்னு சொல்லறீங்க. 'வாய்ப்பு' - ன்னு நாம தமிழ்ல பயன்படுத்தற சொல்லுக்கு பதிலா திரை உரையாடல்ல 'சான்ஸ்' - ங்கற ஆங்கிலச் சொல்லைப்
பயன்படுத்தறாங்க. சினிமா டிவி ரேடியோ நிகழ்ச்சில எல்லாம் ஆங்கிலச் சொற்களை வேணுமின்னே கலந்து பேசி நம்முடைய நாகரீகத்தையும் தமிழ் மொழியையும் சீரழிக்கறாங்க.
😊😊😊😊😊
நாம என்னடப்பா செய்யறது?
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😢
சிரிக்க அல்ல. சிந்திக்க..

எழுதியவர் : மலர் (19-Jul-17, 1:28 am)
பார்வை : 120

மேலே