கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்-காதல் துளிகள்-04

.........கொஞ்சம் காதல்
கொஞ்சம் மோதல்........

காதல் துளிகள் : 04


16.நீ என் அருகில் இல்லை
என அறிந்தும் குடை பிடித்துச்
செல்கிறேன்..
என் குடைக்குள் மழையாக நீ
வருவாய் எனும் நம்பிக்கையில்..

17.சுவரில் வண்ணமாகாத பல
சித்திரங்கள்..
நாட்குறிப்பின் திகதிகளோடு
தொலைந்து போகின்றன...

18.காத்திருப்புகளின் பயணத்தில்
காதல் எழுத வேண்டிய பக்கங்களில்
காயங்கள் கையொப்பமிட்டுச்
செல்கின்றன..

19.கடந்த காலங்களில் சுமந்த
நினைவுகள்..
காதலின் உறைவிடத்தில்
ஒளிந்து கிடக்கும் முகவரிகளைத்
தேடி அலைகின்றன..

20.நீ என்னை விட்டு விலகியும்
நான் உன்னை நிழலாகத்
தொடர்வதன் அர்த்தம்- நீ
என்னை மறந்திடுவாய் என்பதால்
அல்ல...நீ இறந்திடுவாய்
என்பதால்...

எழுதியவர் : அன்புடன் சகி (20-Jul-17, 7:06 pm)
பார்வை : 702

மேலே