அவளும் நானும்

என் இன்பம் உன்
அருகில்

என் துன்பம் உன்
தொலைவில்

என் தோல்வி உன்
தோளில்

என் துயரில் உன்
துணை

என் விழிக்கு நீ
மொழி

என் வலிக்கு நீ
நெறி

என் காதல் நீ
கவிதை

என் பாசம் உன்
நேசம்

என் நினைவு உன்
கனவு

என் தேடல் உன்
பாடல்

என் பாதை உன்
பயணம்

என் வண்ணம் உன்
எண்ணம்

என் ஏக்கம் உன்
பக்கம்

என் தேவை உன் நட்பு
(காதல்)

எழுதியவர் : யோபாலா (21-Jul-17, 11:24 am)
சேர்த்தது : பாலாசுப்ரமணி மா
Tanglish : avalum naanum
பார்வை : 649

மேலே