அவளின் பிறந்தநாள்
......அவளின் பிறந்தநாள்.....
இன்றைய தினத்தின்
அதிசயத்தை
பூக்களிடம் கேட்டேன்
புன்னகையோடு எனைப்
பார்த்துச் சிரித்தது....
இதற்கு எதற்கு இப்படியொரு
சிரிப்பு என என் சிந்தையை
கசக்கிப் பிழிந்தவாறே
விழி உயர்த்தி வானைக்
கேட்டேன்...
மழையாய் வந்து எனை
நனைத்துச் சென்றது..
இது என்ன எனக்கு வந்த
சோதனை என்று ஆடை
மாற்றி வந்து
அசைந்து கொண்டிருந்த
மரங்களைக் கேட்டேன்
ஆடிய ஆட்டத்தில் விழுந்த
கனியொன்று என் தலையை
பிளந்து சென்றது..
கலங்கிய மூளைக்குள்
எதுவோ ஒன்று சுழன்றடிக்க
ஓடிச் சென்று நாட்காட்டியை
உற்றுப் பார்த்தேன்...
உன்னவள் பிறந்த நாளென்று
அது உரக்கச் சொன்னது...