வாடிய முகங்களின் வாழ்க்கை பாதை

வாழையடி வாழையாய்
வாழ்வழிக்கும் வயோதிகன்
வறுமை நிறம் மறந்து - பச்சை
வண்ணங்களால் அலங்கரித்தவன்
வாடிய முகம் - ஆனாலும்
வாடாத மனம்
வழக்கமாய் போன கோரிக்கைகள்
வளர்மதி குரலாய் வெளிவந்தும்
வழிகள் இருளாய்
வாய் திறந்து மண்ணை புகழ்ந்தால்
வாதாட்டம் மட்டும் தொடர்கதை
வார்த்தை சுதந்திரத்தை பறித்து - தேசம்
வாழ்க பாரதம் என்று கூவுகிறது
வாய்ப்புகள் அழிந்தும்
வாழ்விக்க துடிக்கும்
வறுமை விவசாயம்
வந்தோர் எல்லாம் சென்றுவிட்டார்
வாழ்ந்தோர் எல்லாம் மாண்டுவிட்டார்
வயிறு புடைத்தோர் எல்லாம் ஆண்டுவிட்டார்
விவசாயி மட்டும் நிர்கதியாய் ஆதி முதல்....
விவசாயம் வளர்ப்போம்
வளர்ந்த பாரதம் படைப்போம்......

- மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (21-Jul-17, 4:29 pm)
பார்வை : 2031

மேலே