அரசியல்வாதி
![](https://eluthu.com/images/loading.gif)
அடிப்பது கொள்ளை
அணிவது வெள்ளை
முத்திரை கேட்பது சின்னம்
முகத்திரை கொண்டுள்ளது எண்ணம்
தேர்தல் நேரத்தில்
ஆசாமியெல்லாம் சாமியகின்றான்
அரசியல்வாதிக்கு
ஏழைகளின் பாதங்கள்
அவன் வணங்கும் வேதங்கள்
சேருகின்றான் கட்சியில்
தேருகின்றான் சூழ்ச்சியில்
பிடிப்பதோ ஆட்சியினை
குடிப்பதோ ஏழை மக்களின் மூச்சியினை
நாக்கைப் பொய்
சொல்ல ஆதரிக்கின்றான்
வாக்கை அவனை
அள்ளச் சேகரிக்கின்றான்
குடிசையில் முதுகு
வணங்கி நுழைகின்றான்
குழந்தையைக் கூட முகம்மலர்ந்து
வணங்கி மகிழ்கிறான்
வெற்றி பெறப்போடுகின்றான் கூட்டம்
வென்றபின் ஓடுகின்றான் ஓட்டம்
பணத்தைக் கொடுத்து
மனத்தைக் கெடுக்கின்றான்
இலவசம் கொடுத்து
இவன்வசம் எடுக்கின்றான்
சட்டசபையில் அமர
ஏழைக்கு சட்டை கொடுக்கின்றான்
அமர்ந்தவுடன் கையில்
சாட்டை எடுக்கின்றான்
தேர்தலுக்கு முன்
கர்ணனாய் பிறக்கின்றான்
தேர்தலுக்குப்பின்
கும்ப கர்ணனாய் இருக்கின்றான்