அன்பின் நட்பு

அர்த்தங்கள் தேவை இல்லை
அன்பின் முன்னால் ...

ஒரு அடி சொல்லிவிடும் ...
ஒரு துளி கண்ணீர் சொல்லிவிடும் ...
ஒரு தாலாட்டு சொல்லிவிடும் ...
ஒரு தாய் மடி சொல்லிவிடும் ...
ஒரு அரவணைப்பு சொல்லிவிடும் ...
வார்த்தை ஊமையாகி வழிகின்ற ஆனந்த கண்ணீர் சொல்லிவிடும் ...
ஒரு முத்தம் சொல்லிவிடும் ...
ஒரு ஸ்பரிசம் சொல்லிவிடும் ...
ஒரு பதற்றம் சொல்லிவிடும் ...
ஒரு விரல் கோர்வை சொல்லிவிடும் ...
ஒரு நம்பிக்கை சொல்லிவிடும் ...
ஒரு புன்னகை சொல்லிவிடும் ...
ஒரு தவிப்பு சொல்லிவிடும் ...
ஒரு தேடல் சொல்லிவிடும் ...
ஒரு பிரிவு சொல்லிவிடும் ...
அதன் பின் வரும் சந்திப்பு சொல்லிவிடும் ...
வார்த்தைகள் தேவை இல்லை கண்ணே சொல்லிவிடும் ...
உன் மீது நானும் என் மீது நீயும் கொண்ட பாசத்தை ...

* சமர்ப்பிக்கிறேன் என் உயிரோடு இவ்வரிகளை என் குடும்பத்திற்கும் தோழிகளுக்கும் ...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (23-Jul-17, 7:50 am)
Tanglish : anbin natpu
பார்வை : 1630

மேலே