அக்கா

அக்கா ...
நீ கதை சொல்லி உறங்க வைத்ததும் ...
உந்தன் மடியில் கண்ணுறங்கி விழித்ததும்...
நீ ஊட்டி விட்ட சோறும் ...
ஊஞ்சல் ஆடிய நொடியும் ...
ஓடி பிடித்து விளையாடியதும் ...
ஐஸ்பாய் ஆட்டமும் ...
மழையில் ஓட்டமும் ...
மழலை தனமும் ...
ஆத்துக்குள்ள ஆட்டமும் ...
சேத்துக்குள்ள நண்டு பிடித்ததும் ...
கொல்லையில மல்லாட்டை((வட்டாரச் சொல் )=>நிலக்கடலை ) பிடுங்கியதும்
குலசாமி கோவிலிலே குறிஞ்சி பழம் பறித்ததும்
மாமரத்தில் மாங்காய் பறித்து காக்கா கடி கடித்து உண்டதும் ...
உன் வாயில் ஊட்ட வருவது போல் வந்து என் வாயில் போட்டு வெறுப்பேத்தி கடுப்பேத்தியதும் .....
வானரமாய் வாலுத்தனம் செய்ததும்
நினைவில் இருந்து நீங்குமா ...
எந்தன் உடலுக்கு கூட என் அக்காவின் அன்பை தெரியும் ...
செத்த உடல் துடிக்கும் உன் அன்பில் ...
உன் கண்ணீரை துடைக்கும் என் கைகள் ...
உன்னை சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பேன் உன் செல்ல தங்கை பிரபாவதி வீரமுத்து

அக்கா ...
வட திசை தெரியுமா ...
இதான் வட திசை ...
இல்ல இதுதான் வட திசை ...
ஏய் அதா வட திசை ...
இதோ இது வட
அது திசை ...
வட திசை ...சிம்பிள் ...
ஏய் உன்ன ...
ஹா ஹா ...உன்னால என்ன பிடிக்க முடியாதே .....

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (22-Jul-17, 4:28 pm)
Tanglish : akkaa
பார்வை : 11161

மேலே