அன்புத்தம்பிக்கு அக்கா எழுதியது,

அன்புத் தம்பிக்கு அக்கா எழுதியது,

உன்னை நான் நேசிக்கிறேன்.
நீ வீட்டில் இருக்கிறாய்
என்று நான்
உணர்கிறேன்.
நீ தனியாக இருக்கிறாய்
என உணர்கிறேன்.
நீ இங்கு
இல்லாமல் இல்லை.
நீ செய்ததை
நீ ஏன் செய்தாயென்று கேட்க நான் அங்கு இல்லாமல் இல்லை..

நாம் குழந்தைகளாக இருந்தபோது, நம் வீட்டு முற்றத்தில்
விளையாடினோம்.
நாம் ஓடி விளையாடினோம்.
நீ என்னைப் பார்த்து
சிரிப்பாய்.
உன் புன்னகை ஒரு மைல் நீட்டிக்க நானும் புன்னகைப்பேன்.

அந்தக் கெட்ட நாளன்று நீ என்னைப் பார்த்துச் சிரிக்க
மட்டுமே முடிந்தது.
என்னால் நீ காணும்படி சிரிக்க என்னுடலில் நானில்லை...

நீ என்னில் பாதியாக
இருந்தாய்,
நான் என்ன சொன்னாலும் செய்து முடிக்கும் அன்புத் தம்பியாய்...
அந்த ஆத்மார்த்தமான அன்பு என்னைத் தூண்டுகிறது நீ என்ன செய்கிறாயென்பதைப் பார்ப்பதற்கு...
என்னால் செய்ய முடியாத ஒன்று
என்பதால் அது
இன்னும்
வலிக்கிறது.

உன்னால்
எல்லாவற்றையும்
சரியாக செய்ய
முடியுமென்று நான்
நினைக்கிறேன்...
ஆனால், என்னால்
முடிந்த அனைத்தையும் உனக்காகச் செய்வேன்.
அனுதினமும் இரவும், பகலும் நான் உனக்காக
ஜெபம் செய்கிறேன்..

சில நேரங்களில் நீ இன்னும் இங்கே இருக்கிறாய்
போல,
நான் கதவைப்
பார்க்கிறேன்...
நீ உனது பணி முடித்து திரும்பி வர
காத்திருக்கிறேன்..

நீ என்னை மறக்கவில்லையென்று நான் உணர்கிறேன்..
நீ தனியாக இருப்பதை நான் உணர்கிறேன்..
நான் உன்னை மிகவும்
நேசிக்கிறேன்;
நீ எனக்கு தெரியாது ஒரு விஷயமும் செய்வதில்லை...
என்னிடம் சொல்லிவிட்டே செய்கிறாய்...
நீ எப்போதும் என்
சிறிய சகோதரனாகவே இருக்க வேண்டும்....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (22-Jul-17, 6:52 pm)
பார்வை : 11828

மேலே