காலத்தின் நியதி
காலத்தின் நியதி
சின்னச் சிறு பாதம் கொண்டு
சிறிய மகவு தானே நடக்கையில்
சிவந்த அப்பாதம் தனை கண்டு
சிரித்துப் பரவசம் அடைந்த அன்னை
மைவைத்துச் சிவந்த பாதம் தனைக்கொண்டு
சீர் எடுத்து மறு வீடு நோக்கி நடக்கையில்
கண்ணீர் விட்டு பரிதவிப்பது
காலம் வகுத்த நீதியோ !

