ஊமை நெஞ்சின் ஓசைகள்
நீ
மௌனமாயிருந்தாலென்ன
உன்
இதயத்தின் ஒலிபரப்பு
கேட்டுக்கொண்டுதானிருக்கிறது !
நீ
இருளிலிருந்தாலென்ன
உன்
அன்பின் வெளிச்சம்
பரவிக்கொண்டுதானிருக்கிறது !
பேசாததால் நெருக்கம்
குறைந்துவிடவில்லை
தூரங்களால் நாம்
தொலைந்துவிடவில்லை
உன்னையும் என்னையும்
இணைக்கிறது
அன்பின் இழை
நம் சிரபுஞ்சி இதயங்களில்
என்றும் மழை !
#மதிபாலன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
