அத்தனை கவிதையும் உன்னை தேவதை யாக

எதேச்சையாக பார்த்தேன்
என்று சொன்னாலும் சரி !
எதார்த்தமாக பேசுகிறேன்
என்று சொன்னாலும் சரி !
உன் எண்ணத்தில் நான்
இக்கணம் இல்லை என
நீ மறுத்தாலும் சரி !
அடுத்து அடுத்து உன்னைப்பற்றி
நான் எழுதப்போகும் அத்தனை
கவிதையும் உன்னை "தேவதை " யாக
மாற்றாமல் விடாது !