எனக்குள் நான் தேடுவது
நான் தூங்குவதாக எண்ணினேன்
என் நித்திரையை தொலைத்து விட்டு
என் மன வாசலில் பல கோலங்கள்
இட்டது யார் தெரியவில்லை
நானோ! முக்காடிட்டவளாக
எனக்குள் என்னை தேடினேன்
என் வாழ்க்கை முடிந்த பின்னும்......
என் இதய(இ)ராஜ்யம் இடிந்து சுக்குநூறாகி விட்டதுவே ....
சொந்தங்களின் சொல் எனும் யுத்தத்தால் ......
இன்னும் எனக்குள் நான் யாருமின்றி
அனாதையாக என்னுள் நான் தேடுவது
உறவுகளின் வரவையல்ல
தொலைத்துவிட்ட என் வசந்த கால வாலிபத்தையும்
சிதைந்து போன என் தூக்கத்தையுமே.....
அஸ்லா அலி