உறங்கா இரவுகள்
கவியெழுத
உறங்காத இரவுகள் பல
அன்று.
இன்றும்
உறங்காத இரவுகள் உண்டு
கவி மட்டும் தான் இல்லை.
நான் கவிஞனல்ல
எனச் சொல்லி விலகினாலும்
கவிஞனென என்னை
உலகம் சொல்லும்.
இன்றோ
அந்த நினைவுகள் தான்
என்னை கொல்லும்.
காலம் தான் என்னை
கறை ஏற்றியது
பாலன் என்னை
பைத்தியமாக்கி
இதுதான்
எனது விருப்பம் என்றது
அறியா வயதில்
புரியா காதல்
அதனால் பயன்
உளதா என்றது
காதலித்து கவிதை
எழுதும் நாட்டில்
கவிதையை
காதலித்து
எழுதினேன்.
அந்தக் காதலும்
காலத்தில்
கரைந்து போனது.
நம்படா நானும்
கவிஞன் என்றால்
என்ன வம்படா
என்றனை
உலகம் பார்க்கும்
மீண்டும் பிறப்பு
என்பதே முடிவு
இறவா வரம்
என்பதே விடிவு
இறைவன் எனக்கொரு
வரம் தனை தந்தால்
குறையா வளத்துடன்
நிறைவாய் கவிதை
அருளும் வரத்தை
தருவாய் என்பேன்
அதுதான் எனது
விதிதான் என்றால்
புதிதாய் நானாரு
விதிதான் செய்வேன்.
நாளும் கவிதை
நானும் எழுதி
வாணும் மண்ணும்
கேளும் என்பேன்.
ஆணும் பெண்ணும்
அருகில் நெருங்கும்
காதல் என்னும்
கவியும் தருவேன்.
நாலு கால் பாய்ச்சலில்
பாய்ந்திடும் குதிரை
போல தான் என்னில்
தோன்றிடும் கவிதை
ஆர்வமாய் வந்து
கேட்பவர் தன்னில்
அமுதினை தந்திடும்
அந்நொடி தன்னில்
தவழ்ந்திடும் வயதில்
தாய்ப்பால் மறந்து
தமிழ்ப் பால் உண்டு
வளர்ந்த குழந்தை
தமிழ்த்தாய் மறந்த
தவிப்பால் இன்று
கவிப்பால் தந்தேன்
களிப்பாய் உண்டு