வாழ்க்கை தேர்வு

வாழ்க்கை என்பது வினாத்தாள்
பிறப்பென்பது தேர்வின் தொடக்கம்
தேர்வின் காலஅளவு?"தெரியாது"
தேர்வை நடத்துவர்?"கண்டதில்லை"
தேர்வின் முடிவு?"இறப்பு "
வெற்றி தோல்வி?"எதுமில்லை"
அத்தேர்வொரு மாயை
அதில் வினாக்கள் அச்சடிக்கப்படுவதில்லை!
அவ்வப்போது தோன்றி மறையும்
ஒருவரின் விடைகள் மற்றொருவருக்கு
வினாக்களாகும்.
சில வினாக்களுக்கு விடைகள் எளியதாயிருக்கும்
சில வினாக்களுக்கு பல வினாக்களை கடந்தால்தான்
விடை கிடைக்கும் !
சிலவற்றின் பதில்கள் ஆச்சரியக்குறிகளாகும்!
சில வினாக்களுக்கு விடையே "கேள்வி குறிகளாகும்"
இத்தேர்வில் நமக்காக பதிலெழுத எவருமில்லை!
மதிப்பெண்களோ விடைகளை பொருத்ததல்ல
மதிப்பீடு அனைவருக்கும் சமமானது
தேர்வு நேரமோ அனைவருக்கும் போதுவாயிருப்பதில்லை
வினாக்கள் ஒன்று போலிருந்தாலும்
வேற்றுமைகள் விடைகளை பொருத்தது
இதன் விந்தை காண்! முன் நீ
சந்தித்த வினாக்களே பின் வரும்
வினாக்களுக்கு விடைகளாகும்!
நீ விடையளிக்கா விட்டாலும்
தேர்வு முடிந்தே தீரும் ..

எழுதியவர் : வெ மா (25-Jul-17, 9:46 pm)
Tanglish : vaazhkkai thervu
பார்வை : 76

மேலே