ஆதலினால் கொலை செய்தேன்

இரவு.....
டிங்...டிங்...டிங்... அழைப்பு மணி ஒலிக்கிறது....
யார் இந்த நேரத்துல,, அவிழ்ந்த கைலியை சரிபடுத்திக்கொண்டே
கதவை திறக்கிறான் அவன்...
கிளிக்....
வெளியே அவன் நிற்கிறான்..கெச்சலான அழுக்கு உடை..
முகத்தில் தாடி...

யாரு...? யாரு வேணும்...?
அவன் யோசிக்கவே இல்லை.. பளிச் என்று
கத்தியை வயிற்றில் இறக்குகிறான்...
குபுக்.. என்று இரத்தம் உடையை நனைக்கிறது...

அம்மாஆ...என்று வயிற்றை பிடித்து தரையில் சாய்கிறான்...

குத்தியவன் சகவசமாய் நடந்து போய்க்கொண்டிருக்கிறான்....

சில மணி நேரத்தில் அந்த இடம் பர பரப்பானது...

ஆம்புலன்ஸ் அலறிக்கொண்டு நிற்க.. காவலர்கள்
இறந்து கிடந்தவனை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்...
தடவியல் நிபுணர்கள் பவுடர் தூவிக்கொண்டிருக்க,,
இன்ஸ்பெக்ட்டர் பார்வையிடுகிறார்..

கொலை எப்படி நடந்துச்சு..?

கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார் சார்..
ரத்தம் ஓவரா வேலைய போய் செத்துட்டார் சார்...

இறந்து கிடந்தவனை பார்க்கிறார்..
அதிகமாய் ரத்தத்தை அறை முழுக்க சிந்தி
அதில் இறந்து கிடக்கிறான் அவன்...

இவரோட மனைவி எங்க..?

உள்ள இருக்காங்க சார்...

அவள் இன்னும் அழுது கொண்டிருக்கிறாள்...
அழுததில் முகம் வீங்கி இருந்ததது...

ஏம்மா எப்படி இப்படி நடந்துச்சு...?
நீங்க என்ன பண்ணிட்டு இருந்திங்க அப்போ...?

சார், நானும் அவரும் ரூம்ல தூங்கிட்டு இருந்தோம்
காலிங் பெல் அடிச்சது யாருனு பாக்க இவரு எந்துச்சு போனாரு..
திடீர்னு அம்மானு சத்தம் கேட்டுச்சு..
போய் பார்த்தா இவரு இப்படி கிடக்கார்.. என்றாள் கேவலுடன்...

சே.. இது மாதிரி நடக்குறது இதோட மூணாவது தடவ..
ஏன் கொல்றான்.. எனக்கு கொல்றான்னு ஒன்னும் புரியல ..
வந்தவனை பத்தி ஒ/ரு துப்பும் கிடைக்கல..
நடக்குற சம்பவங்களை வச்சு பார்த்தா கொலை பண்ணவன்
ஒரே ஆளுன்னு தெரியுது.. அவன் யாரு எதுக்கு கொலை செய்றான்னு புரியலையே...

மறுநாள்....

தொலைக்காட்சியில் செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது...
அவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்..
சிகரெட்டை எடுத்து பத்த வைத்துக்கொள்கிறான்...

"கற்பழிப்பு கொலையில் ஆதாரம் இல்லாததால் ஆளும் கட்சி
எம் எல் ஏ விடுதலை..."

பார்க்கிறான்... எழுந்தான்...
மேஜை டிராயரை இழுக்கிறான்..
எடுத்தான் ரத்தத்துடன் அதே கத்தி....
எடுத்து ஜோல்னா பையில் வைத்துக்கொள்கிறான்...
ஏன்...? ஏன்..? ஏன்..? இந்த கொலை...?

காரணம் அதிஷா...

இவன் காதலி..

பட்டாம்பூச்சி அவள்...
பட்டாம்பூச்சியானவள்....

இவன் காயங்களுக்கெல்லாம் மருந்தானவள்...
தாய் தந்தையற்ற இவனுக்கு இவளே எல்லாம்..
எல்லாமானவள்...

ஓர் அதிகாலையில் இவள் உடல்
தூக்கில் ஆடிக்கொண்டிருந்தது...
பலரால் கற்பழிக்கபட்டதாக மருத்துவ அறிக்கை
சொன்னது..

ஏன்...? ஏன்...? அதிஷா..!!!!
யார்...? யார்..? யார்..?

யார் உன்னை சிதைத்தது...?

அலைந்தான்.. அவள் வேலை செய்த இடமும்
அவள் தோழிகளிடமும்....
பதில் பூஜ்யம்..

அவள் தங்கிய அறைகளில்,,
அருவமான அவளைக்கண்டு அவள் நினைவு உள்வாங்கி
வாழ்கிறான்...
அவளுக்கு டைரி எழுதும் பழக்கமுண்டு..
தேடி கண்டெடுக்கிறான்.. படிக்கிறான்...
அவள் அவனுடன் வாழப்போகிற வாழ்க்கையை, கற்பனை கவிதைகளால்
எழுதி வைத்திருக்கிறாள்..
ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு கவிதை அவனுக்காய்...
அவனுக்கே அவனுக்காய்...
அவனுக்கான கவிதைகளை மட்டும் அவனுக்கே நிறைத்து வைத்திருக்கிறாள்...
இவன் கண்ணில் கண்ணீர் வருகிறது,,

அவள் எழுதிய கடைசி பக்கத்தில் மட்டும் அவசரமாய்
கிறுக்கிருக்கிறாள்..
தான் களங்கபட்டு போனதை களங்கபடுத்தியவர் இன்னார் என்று...

ஓடினான் காவலிடம்...
டைரியை வாங்கிக்கொண்டது போ என்றது..

அந்த பக்கம் பணம் பேசியதால் என்னவோ,, காவல் அமைதியடைந்து...

கேட்டான்...

எகிறி செவுளில் அறைந்தது...

என்ன செய்வான்...?

பணம் விளையாட ஆரம்பித்தால் பிணம் கூட நாட்டாமை
செய்ய ஆரம்பிக்குமே....

நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தான்...

குற்றத்தில் எந்த முகாந்திரமும் இல்லை என
விடுதலை ஆனார்கள் அவர்கள்...
பணம் இங்கும் பேசியது...

என்ன செய்வான்..?

என்ன செய்வது அதிஷா...?
பழி வாங்கியே ஆகவேண்டும்...

அதிஷா....!!!!

போ போ போ...
தேவை கொலை கொலை....

மூன்று கொலை.....

இதோ, இன்று சாட்சி இல்லாமல் விடுதையான அந்த எம் எல் ஏ...

இரவு....

டிங் டிங் டிங்....

யாராது..
அவிழ்ந்த கைலியை மாட்டிக்கொண்டு கதவை திறக்கிறான்...
அந்த எம் எல் ஏ...

பளிச் வயிற்றில் பாய்கிறது...
குபுக்...ரத்தம்.. இரத்தம்.....

நடக்கிறான்....

அவன் காவல் துறைக்கு எழுதி வைத்த கடிதம்
ஜோல்னா பையில் இருக்கிறது....
"ஆதலினால் கொலை செய்தேன்"

தண்டவாளத்தில் படுத்துக்கொள்கிறான்...

தூரத்தில் ரயில் கூஊஊஊஊ......

கண்ணை மூடினான்....

அதிஷா இதோ வருகிறேன்......

எழுதியவர் : அருள் ஜெ (26-Jul-17, 3:01 pm)
பார்வை : 526

மேலே