சிறுமியாய் மாறி

தூக்கம் கலைத்து வந்த மறுநொடியே
உற்சாகமும் அன்பும் தளும்ப
சிரிக்கும் மழலையின் முகம்
காலை ஜன்னலை திறந்ததும்
கன்னத்தை முத்தமிடும்
முதல் குளிர் தென்றல் ...

இலைமேல் படர்ந்த பனித்துளியின்
இயற்கை அழகு இவர்கள்
இந்த தளிர் பொலிவு பெற
முகம் கழுவ வேண்டியதில்லை...

உற்சாக பானம் தேவைப்படாத
உற்சாக ஊற்றுக்கள்
உற்சாகத்தை ஊற்ற முழுதாய்
ஒரு கப் டீ தேவைப்படுவதில்லை...

வற்றாத நதியை போல உற்சாகம் எங்கிருந்து பிறக்கிறது
என்று தானே யோசிக்கிறேன்
கொஞ்சம் பொறாமை கொள்கிறேன்
கூடுதலாய் பேராசை கொள்கிறேன்

மீண்டும் குழந்தையாதல் சாத்தியம் என்றால்
இறைவனிடம் சாகும் வரம்தான் கேட்க போகிறேன் ......
சிறுமியாய் மாறி மீண்டும் சிறகடித்து பறக்க போகிறேன் ....

யாழினி வளன் ....

எழுதியவர் : யாழினி valan (28-Jul-17, 12:53 am)
பார்வை : 513

மேலே