நீ இருந்தும் இல்லை

'' நீ இருந்தும் இல்லை ''

உன் முகம்
பார்க்க முடியவில்லை ..(?)
மன்னிப்பு கேட்கும்
பழக்கமும் இல்லை ...

முயற்சித்தும்
முடியவில்லை ...

பிரிந்துசெல்ல
பரிவு இல்லை ....

அருகில் இருந்தும்
அன்பு இல்லை ....

விலகிச்செல்ல
விருப்பம் இல்லை...

அறிவுரை கூற
ஆள் இல்லை ...

இருந்தும் வடிக்கிறேன்
என் எண்ணங்களை
கவிதைகளாக ....!

வினோ வி .....!

எழுதியவர் : வினோ வி (30-Jul-17, 8:18 am)
சேர்த்தது : வினோ வி
பார்வை : 437

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே