உச்சி முகர்ந்தொரு முத்தம்
உன்னிடமிருந்து
எனக்கான எதிர்பார்ப்புகள்
அதிகம் ஒன்றுமில்லை,
கண்டவுடன்
தலை கலைத்து
"ஏஞ்செல்லம்" என்றோர் அழைப்பு...
கன்னந்தடவி
வாயில் இட்டுகொள்ளும்
ஒர் முத்தம்...
எலும்புகள் நொறுங்கும்
ஒர் இறுக்கமான அணைப்பு...
உன்னை விட்டு
விலகும் தருணங்களில்
உச்சி முகர்ந்தொரு முத்தம்...
இவை தவிர
வேறு யாதொன்றுமில்லை,
உன்னிடமிருந்து
எனக்கான
எதிர்பார்ப்புகள் ...