ஏமாற்றும் ஏமாளிகள்
மனிதர்களைக் கொன்றால்,
அதுவும் தனது நாட்டைச் சேர்ந்தவர்களைக் கொன்றால்,
தனது சாதி, மதத்தைச் சேர்ந்தவர்களைக் கொன்றால்,
எட்டிப் பார்க்கிறது கானல்நீராய் மனிதம்...
இயற்கையை அழித்து,
இயற்கை வளங்களைப் பணமாய், சொத்துகளாய் பதுக்கிக் கொண்டு சுயநலம் கொண்டு தொழிற்நுட்பங்களை வளர்க்கிறது மனிதம் மரித்த மனிதம்...
எல்லாத்திலும் போலி கொண்டார்...
போலிகளே சிறந்தவையெனப் புகழாராம் கொண்டார்...
அழிக்கும் ஆயுதங்களை ஏற்றிவைத்து பலமென்றார்...
சக மனிதனை ஏழையாக்கி அவனுக்குப் பிச்சையிடுதல் புண்ணியமென்றார்...
போதும்டா சாமி...
இந்த அன்பற்ற சமூகம் இவ்வுலகை அழித்தது போதும்டா சாமி...
நாட்டின் பொருளாதாரமென்றார்...
பொதுவுடைமையென்றார்...
தனித்தனியாய் மாளிகைவீடுகள் கட்டி மதில் சுவரும் கட்டிக் கொண்டார்...
வாய் பேசிய, பேசும் நன்னெறிகளெல்லாம் நடைமுறையில் காணவில்லையென்று கேட்டால், இன்னும் வளராத சிறுகுழந்தையாகவே இருக்கிறாயென்று என்னை மட்டம் தட்டிக்கழிக்கிறார்...
நாடு, நாடென்று கூவி ஞானிலத்திலே வாழ்ந்தாலும் உலகமெங்கும் சுவாசிக்கும் காற்று ஒன்றே என்று அறியாத மூடர்கள் தான் நாம்...
உண்மையில் அறிவியல் வளர்ச்சியில்லா சுயநலத்தில் மூழ்கிய ஜந்துகள் நாம்...