மனிதநேயம்
உடல் என்பதில் வேற்றுமை இருப்பினும்;
உயிர் என்பதால் ஒற்றுமை கொண்டு;
துயரம் கண்டதும் கண்ணீர் விடுத்து;
இஷ்டப்பட்டு இனிதே உதவுவார்….
இயலாமை என்னும் துன்பத்தில் சிக்கி;
இன்னுயிர் துறக்கும் நிலையில் நின்றோரை,
தன்னுயிர் கொண்டு தடையை உடைத்து;
தன்னால் இயன்ற உதவிகள் புரிவார்….
இதயம் என்பதை சதையாய் நினைப்பவர்;
வாழத் தெரிந்தும் வாழ்வை துறந்தவர்....
அன்பு என்பதை நிஜமென உணர்ந்தவர்;
உடன்சேர்ந்து வாழும் வித்தை அறிந்தவர்….
நாணயம் என்பதை உனதென கொண்டால்,
வாழ்க்கை என்பது “வரமாகும்”
மனிதநேயம் கொண்டவர் வாழ்க்கை என்பது,
ஒவ்வொரு நாளும் “சுகமாகும்”.