மறதி

"மச்சி ! நாளைக்கு தலைவரோட படம் ரிலீசாகுது .மதியம் கிளாஸை
கட் பண்றோம் .படத்துக்கு போறோம் ',என்றான் யுவராஜ் .
" நம்ம ஹெச்ஓடியப் பத்தி தெரியுமில்ல. கிளாஸை கட் பண்ணா மறுநாள் வெளியில நிக்கவெச்சு கேள்விகேட்டு மானத்த வாங்குவாரு "-இது அஷோக் .
"அதுக்கும் நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன் .அதை நாளைக்கு சொல்றேன் ."

மறுநாள் மதியம் .முதல் பாடவேளை .ஹெச்ஓடி வகுப்பில் இருந்தார் .யுவராஜ் தாமதமாக வந்தான்.
"ஏன் லேட்டு ?"
"வெளிய போய் சாப்பிட்டுவர லேட்டாயிடுச்சி சார் "
"சரி .எங்கே உன் ஐடி கார்ட் ?"
"அது வந்து ...மறந்து வச்சிட்டு
வந்துட்டேன் சார் "
"வேற யார் யாரெல்லாம் ஐடி கார்டு இல்லாம இருக்கீங்க .எல்லாரும் வெளிய போயிடுங்க "
கூட்டமாக அந்த எட்டு பேரும் எழுந்தார்கள்.வெளியே போனார்கள் .
"எப்படி நம்ம ஐடியா "என்றான் யுவராஜ் .
"சூப்பர்டா "என்றார்கள் கோரஸாக .

மறுநாள் காலை .
"நேத்து ஐடி கார்டு இல்லாம வெளிய போனவங்க எல்லாம் நில்லுங்க "
"ஏன் ஐடி போடல "
"மறந்து வந்துட்டோம் சார் "
"நேத்து காலைல எல்லார்கிட்டயும்
ஐடி இருந்தது .மதியம் யாரும் வீட்டுக்குப் போகல .அப்புறம் எப்படி மறந்து வைக்க முடியும் ?"
எல்லாரும் திருதிருவென்று விழித்தார்கள் ,யுவராஜ் உட்பட !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (5-Aug-17, 10:34 am)
சேர்த்தது : இளவெண்மணியன்
Tanglish : maradhi
பார்வை : 340

சிறந்த கவிதைகள்

மேலே