மிலாவும் மின்மினி பூச்சி கனவுகளும் - 1 - அவரை விதை

ஒரு அழகான கிராமம் பச்சை பசேல் என்று இருந்தது . கண்ணுக்கு அத்தனை குளிர்ச்சியும் அழகும் பார்த்தாலே . அந்த ஊரில் அழகிய சிறுமி ஒருத்தி இருந்தாள். பேரு மிலா. அவள் பச்சை பட்டாடை உடுத்தியிருந்தாள்.

மிலாவின் வீட்டு பின்னாடி அன்று முதன் முறையாக அவரை விதை இட்டனர் அம்மாவும் மகளும் . மிலாவுக்கு அந்த செடி நாளை முளைக்குமா என்ற ஆர்வம் அடக்க முடியாத அளவுக்கு வந்து கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தது . முளைத்தால் எப்படி இருக்கும் என்று அம்மாவை நாள் முழுவதும் கேட்டு கொண்டிருந்தாள் .

தோட்ட வேலைகளில் அவள் அவ்வளவு ஈடுபட்டது கிடையாது. ஏன் அவள் அம்மாவும் கூட தான். இந்த அவரை செடி வளர்க்க போவதும் மிலாவுக்காக தான். பள்ளியில் செடி வளர்ப்பு பற்றி ஆசிரியை சொல்ல அம்மாவை வந்து தொந்தரவு செய்தாள் அவள். அதன் காரணமாகவே அம்மாவும் அவளும் அன்று தோட்டத்தில் இறங்கியது.

முதல் செடி எப்படி இருக்கும் இருக்கும் என நினைத்தபடியே அவள் உறங்கி போனாள். தூங்கிய அவள் கண்களுக்குள் கனவுகளின் உலகம் விரிய தொடங்கியது மெல்ல.

அவள் இட்ட விதை ஒரு இரவிலே பெரிய செடியாக வளர்ந்திருந்தது. டீச்சர் காட்டிய படத்தில் இருந்தது போலவே வெகு அழகாக இருந்தது அது.யார் கம்பு நட்டார்கள் என தெரியவில்லை அழகாக கம்பு நட்டு அதை படர விட்டிருந்தார்கள். ஆஹா அவள் கைகள் மெல்ல அதன் பச்சை இலைகளை தொட்டு உரசி ரசித்தது.

இன்னும் நன்றாக பார்த்தால் அதில் மஞ்சள் பூ தெரிந்தது. ஆ பூ கூட பூத்தாச்சா மிலா, குதித்தாள். தலையில் அதை பறித்து சூடும் ஆசை வந்தது தடுத்து கொண்டாள் வேண்டாம் என தனக்குள் சொல்லிக் கொண்டாள். கொஞ்சம் தள்ளி பார்த்தால் அடுத்த ஆச்சரியம் காத்திருந்தது .

அவள் கண்கள் கோழி முட்டை போல விரியத் தொடங்கின. ஆஹா அவரை தான் காய்த்தும் விட்டதா..அதிகம் விளையாமல் ஓரளவு பிஞ்சு போல இருந்த அவரை அவளை பார்த்து அசைந்தது. இரு அவரை இரட்டையர்கள் போல சேர்ந்து கிடந்தது.

இனியும் பொறுமை இல்லை என நினைத்த மிலா, அவரை பூவை தானே பறிக்க கூடாது காயை பறிக்கலாமே என சிரித்தபடி அதை பறிக்க கையை நீட்டினாள். ஒன்றை பறிக்க போனபோது ஒரு அவரை சிரிப்பதாக தோன்றியது . அவள் கைபடாத அவரை சத்தம் இல்லாமல் அழுவது போல தோன்றியது. ஒரு வேளை அவர்கள் பிரிய விரும்பவில்லையா. " நீங்க நண்பர்களா அல்லது இரட்டை குழந்தைகளா" என கேட்டபடியே இரு கைகளிலும் ஆளுக்கொன்றாக பிடித்து சேர்த்தே இழுத்தாள்.

செடியிலிருந்து விடுதலை பெற்ற அவரை அவள் கையில் வந்ததும் தவறி கீழே விழுந்தது. அவள் அதை எடுக்க கீழே குனிய அவரை இரண்டும் மீன் போல துள்ளிற்று . மிலா, ஆச்சரியத்தில் செய்வது அறியாமல் நின்றாள். துள்ளிய அவரை இரண்டும் சேர்ந்தே எழும்பியது மீண்டும் அவரை செடியில் ஏறி அமர்ந்து கொண்டு சிரித்தது பின் ஒரு பயங்கர காற்று வர அவை இரண்டும் தேவதை உருப்பெற்றன.

மிலா, ஆச்சரியத்தில் பயத்தில் எதோ ஒரு உணர்வில் கால்களை பின்னோக்கி நகர்த்துவதை கண்டுகொண்ட அவை நில் குட்டி பெண்ணே என்றது. நிமிந்து பார்த்த மிலாவிடம் பயப்படாதே என்றதும் அந்த இனிய குரலில் கரைந்து அவள் தேவதையை எட்டி பார்க்க அங்கே ஒரு அழகிய அவரை வடிவ தேவதையும் அவளுக்கு ஏற்ற ஜோடியை போன்ற ஒரு இளவரசனை போல அவனும் நிற்க மிலா, புரியாமல் விழித்தாள்.

தேவதையோ நன்றி குட்டி பெண்ணே நீ என்னை பறித்து எனக்கு உயிர் தந்தாய் . என்னை மட்டும் தனியாக பறித்திருந்தால் நான் தனியாக காட்டில் கவலையோடு திரிந்திருப்பேன் . என் கண்ணனோடு சேராமல் தவித்து போயிருப்பேன். நீ எங்கள் இருவரையும் சேர்த்தே பறித்தால் என்னவரும் உயிர்கொண்டு என்னோடு இனி காலமெல்லாம் உலா வர நீயே காரணமாய் ஆனாய். உனக்கு எப்படி நன்றி சொல்ல என்று அவள் இயம்பி சிறு முத்தம் ஒன்றை அவள் கன்னத்தில் பதித்தாள்.

தேவதையின் விரல் பட்டு மிலாவின் கன்னத்தின் கீழ் ஒரு மச்சம் உண்டானது. மிலாவின் அழகை இரண்டு மடங்காகியது. எப்போதும் உன் தோழியின் உதட்டு மச்சம் மிக அழகு டி என்று சொல்வாயே அதையே உனக்கு என் அன்பு பரிசாக தருகிறேன் என்று சொன்ன தேவதை அவளுக்கு கை அசைத்தபடி தன் மன்னவனின் கரம் பிடித்து பரக்கத் தொடங்கியது.
அந்த மச்சம் அவள் அதிகம் விரும்பியது தான். நிஜமாகவே எனக்கும் இருக்குமா நம்பியும் நம்பாமல் வான் மேலே பறந்து போகும் அவர்களை படபடக்கும் கண்களோடு பார்த்தாள். அதன் அழகை கண்ணாடியில் காண ஓடினாள் மிலா,.

அந்த அதிர்ச்சியில் தேவதையின் அன்பு பரிசுக்கு எந்த நன்றியும் சொல்லமால் நின்று விட்டதை யோசித்தபடி தோட்டத்திலிருந்து கண்ணாடியில் மச்சத்தை பார்க்க ஆசை பொங்க வீட்டுக்கு வேகமாகவே ooda ஆரம்பித்தாள் மிலா.


குழந்தைகளின் கனவுகளோடு
யாழினி வளன் ...

எழுதியவர் : யாழினி வளன் (5-Aug-17, 10:55 am)
பார்வை : 285

மேலே