உரிமைக்காரன்
இடையிலே கோவணம் தோளிலே ஒரு துண்டு கோழி கூவும் நேரத்தில் எழுந்து பண்ணையார் வீட்டு மாட்டு கொட்டகையில் கரவலுக்கென்றும், உழவுமாட்டுக்கென்றும், ஆட்டுமந்தைக்கென்றும் தனித்தனி இடங்களில் கிடக்கும் சாணக் கழிவுகளை அள்ளி சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து முடிக்க மணி ஏழு எட்டு ஆகிவிடும் :
கொஞ்சம் ஓய்வெடுப்பான் உடனே கேழ்வரகு, கம்பும் கலந்த கூழ் மோர் ஊற்றி கரைத்து கொண்டுவந்து வேப்பமர நிழலில் காத்திருக்கும்;
சக்தி வேப்பங்குச்சியை கொண்டு பல்லைதுலக்கி க்கொண்டு ஒரு குளி யலையும் போட்டுக் கொண்டு வேப்பமரத்தடிக்கு வந்துவிடுவான் சக்தியோடு, நாற்றுபறிப்வர், உழவு ஓட்டியவர்களும் வரிசையாக உட்காருவார்கள்; இருகரத்தையும் ஒருசேர்த்து பிடிக்க விரல் இடுக்கிலே பச்சை மிளகாய் செருகி ஊற்றும் கூழை வாங்கி குடித்துவிட்டு மாடுகளை ஓட்டிக்கொண்டு மேய்க்க போய்விடுவான்
பாலிய நண்பன் சக்தியை தேடி அவன் மாடு மேய்க்கும் இடத்தில் கண்டு கட்டி அனைத்து நட்பை வெளிப்படுத்தி
"சக்தி இந்தா இந்த துணிகளை போடு சைசு சரியா இருக்கா பாரு இனிமே நீ கோவணம் எல்லாம் கட்டாதே இந்தா இந்த அண்டர்வீரை போடு அதுக்கு மேல இந்த பனியனைப்போடு இந்த பேன்டையும் சட்டையையும் அதுக்கு மேல போடு"
"சாரதி இதெல்லாம் வீண் செலவு"
"நண்பா இன்னும் எத்தனை நாளைக்கு இந்த மாடுகள் பின்னாலேயே காலத்தை கழிக்கப்போகிறாய்"
"என்ன பண்ண சொல்றே சாரதி என்தலைவிதி இப்படி என் அம்மாவின் வயிற்றை நனைக்க என்னை விட்டா அவுங்களுக்கு வேறு யார் துணை அதனால்தான் இங்கேயே சுத்திக் கொண்டிருக்கேன்"
"சக்தி நான் ரயில்வேல கேங்மேனா இருக்கேன் இப்போ ஆளுசேர்கிறாங்க அதனால் உன்னையும் சேக்கிறதா முடிவுபண்ணி இருக்கேன் நான் திரும்பி போகும் போது நீ என் கூடவே வரனும்"
"சாரதி உனக்கேன் என்னால வீண் சிரமம்"
"சக்தி அப்படி சொல்லாதே என் அம்மா சாவ பொழைக்க கெடந்தப்போ என்னோட அங்காளி பங்காளிங்க சகுட்டுக்கு இருந்தும் ஒரு ஒரு பையக் கூட எட்டிப்பாக்கல என்னான்னும் கேக்கல அந்த நெருக்கடியான நேரத்தில ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோகக்கூட வழியில்லாம இருந்த நேரத்தில அடுத்த வீட்டு மாட்டுவண்டிய நீயே மாட்டைப்பூட்டி ஓட்டிவந்து என் அம்மாவை ஆஸ்பத்திரிவரை கொண்டு வந்து விட வண்டிக் காரங்கிட்ட எங்க அம்மாவுக்காக நீ அடி உதை வாங்க என்ன அவசியம் இருந்தது அதையெல்லாம் நான் மறந்துவிடவில்லை சக்தி"
"அதுவெல்லாம் ஒரு உதவி ப்பா அதைத்தான் செஞ்சேன் அடிவாங்கினது தப்பு எம்மேலத்தான் சொல்லாம கொள்ளாம அவுங்க வண்டிய ஓட்டிக்கிட்டு போனது தப்புதானே அதனால அடிவாங்கினேன் இப்போ என்னங்கிற நான் ஓங்கூட வரனும் அவ்வளவுதானே வந்துட்டா போச்சி ஆமாம் நான் ஓங்கூட வந்துட்டா அம்மாவோட கதி"
நீ ஏங்கூடவந்து வேலை செட்டாயிட்டா அங்கேயே செட்டல் ஆயிடலாமே பிறகு அம்மாவை நம்ம கூடவே அழைச்சிட்டு போயிடலாமே
"அது சரி அதுவரை
அம்மாவை எங்கே•••"
"அட நாம பணம் அனுப்பி வைப்போமே மாசாமாசம்"
"சரிப்பா இதப்பத்தி அம்மாகிட்ட நீதான் புரியவைக்கனும்"
"அதை நான் பாத்துக்கிறேன் நீ கவலையை விடு"
இருவரும் பறப்பட்டு விட்டார்கள் வேலையிலும் சேர்ந்தார்கள் ஆனால் சக்தி ஓரிடத்திலும் சாரதி வேறு ஓரிடத்திலும் இருக்க வேண்டியதாயிற்று
ஆறு மாதம் நகர்ந்துவட்டது ஒன்னுவிட்ட சொந்தக்காரர் தம் மகளை சக்திக்கு கட்டிவைக்க ஏற்பாடு செய்தார்கள்
ஆனால் சக்தி கல்யாணத் திற்கு எந்த முயற்சி யும் எடுப்பதாக தெரியவில்லை என்பதை அறிந்த பெண் வீட்டார் தம் மகளை தமக்கு தெரிந்தவர்கள் மூலமாக சக்தியிடம் அனுப்பி வைத்துவிட்டார்கள்
சக்திக்கு என்ன செய்வது என்றே ஒன்றும் புரிய வில்லை
"உன்னை யாரு அனுப்பிவைத்தது
நான் பெண்கேட்கவே இல்லையே நான் உன்னை பார்த்ததே இல்லை;
உனக்கும் எனக்கும் பேச்சி வார்த்தையும் கிடையாது; அப்படியிருக்க நீ எப்படி என்னைத் தேடி வரலாம்"
"அதைப்பத்தியெல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாது போன்னாங்க வந்துட்டேன்
பெத்தவங்க என்னை ஒரு பாரமா நெனைச்சி பாரத்தை குறைச்சிக்க வேற வழி தெரியல கையில ஐவேசியும் இல்ல அனுப்பிவச்சிட்டாங்க இப்போநீயும் போங்கிற நான் எங்கே போக ஒரே ஒரு வழி இருக்கு"
"என்ன வழி"
"எங்கேயாச்சும் போயி உசுரை விட்டுக்கிற வழி"
"உங்க வீட்டுக்கு போயேன்"
"பொண்ணுங்க நான் ஒருத்தி மட்டும் இல்ல; இன்னும் ரெண்டுபேர் சின்னச்சின்ன பொண்ணுங்க இருக் காளுங்க அவங்களையும் அவுங்க கரை சேத்தனும்"
"அதுக்கு"
"உனக்கு நான் வேணா முன்னா விடு நான் யார் கூட வந்தேனோ அவுங்க வீட்டில் இருந்துகிட்டு பூவ கீவ கட்டி வித்து என் வயித்த கழுவிக்கிறேன்"
"வந்துட்டியா நானே ஓங்கிட்ட வரத்தான் ரெடியானேன் நல்ல வேளை நீயே வந்துட்டே சாரதி"
"என்ன அப்படி தலப்போற விசயம் இது யாரு அட நம்ம ராமலிங்கம் மக கமலம் இங்க எங்கே•••?"
"இதச்சொல்லத்தான் நானே வர இருந்தேன்"
"என்னாச்சி புரியும்படியா சொல்லேன்"
"இவள நான் கல்யாணம் பண்ணிக்கனுமாம் அதுவரைக்கும் எனக்கு ஒத்தாசையா இருக்கச்சொல்லி அவுங்க அப்பனும் அம்மாவும் நம்ம வேலூரார் கூட அனுப்பி வச்சிருக்காங்க இப்ப சொல்லு நான் என்ன பண்ணட்டும்"
"இதுபத்தி உங்க அம்மாவுக்கு தெரியுமா"
"தெரியலையே•••!"
"தெரியும்••• எங்க அப்பாவும் அம்மாவும் போயி இவங்க அம்மாவை பார்த்து பேசின பிறகுதான் என்னைய இங்க அனுப்பிச்சாங்க" என்று கமலம் சொன்னாள்
"அப்புரம் என்ன சக்தி"
"அது உண்மையா பொய்யான்னு யாருக்கு தெரியும்"
"இது உண்மைதான்"
"எப்படி உண்மைங்கிற"
"உன்னை நான் அழைச்சிக்கிட்டு போக தான் அம்மாகிட்ட அனுமதி கேக்கனும்னு நீ சொன்னது ஞாபகம் இருக்கா; நான் கேக்கப்போற அன்னைக்கி அம்மா ஏங்கிட்ட கமலாவைப்பத்தி அவுங்க அப்பா அம்மா வந்து உங்க அம்மாகிட்ட பேசினதா சொன்னாங்க அதனால் தான் உண்மை என்கிறேன்"
"சாரதி இதுல உனக்கு விருப்பம்னா எனக்கு ஒன்னும் ஆட்சபனை இல்லை" என்றான் சக்தி
"அப்படின்னா இப்போதான் நீ வேலையில சேர்ந்து இன்னும் ஓரிரு மாசத்தில நீ பர்மனென்ட் ஆயிடுவே தடபுடலா கல்யாணம் பண்ணனும்னா; நெறைய செலவாகும் அவ்லோ பணம் இப்போதைக்கு நம்மகிட்டே கிடையாது அதனால•••"
"அதனால•••!"
"கோர்ட்டு தாலி கட்டிக்க இப்போதைக்கு வாடகைவீடு எடுத்துக்கோ வாழ்க்கையை ஆரம்பிச்சிக்கோ என்ன"
"சரி சாரதி உன் விருப்பப்படியே செய்
அம்மாவை வரவழைக்கனும்"
"கண்டிப்பா•••!"
ஒருவழியா சக்தி செட்டில் ஆயிட்டான் சில ஆண்டுகள் ஓடியது
கமலா கர்ப்பமா ஆயிட்டா அவளுக்கு எடுபிடி வேலை செய்ய யாரும் இல்லை சக்தியின் அம்மாவுக்கு கால் பார்வைதான் அவுங்களிடம் உதவியை எதிர் பார்க்க முடியாத நிலை
கமலாவின் தந்தை காலமாகிவிட்ட தால் தங்கைகளை வரவழைத்து தன்னோடு வைத்துக் கொண்டாள் கமலா
தங்கைகள் கொஞ்சம் படிச்சவளுங்க நாகரீகமா இருக்க முற்பட்டு செலவை கண்ணு மண்ணு தெரியாமல் செய்யலானார்கள்
அதை சக்தி கொஞ்சம் கடிந்துக்கொண்டான் மைத்துணைவிகளை இது கமலாவுக்கு கோபத்தை மூட்டியது அதனால் சக்திமீது கோபப்பட்டுக்கொண்டாள்
இப்போது கிடைத்த சூழலை வைத்து தங்கைகளை கரைசேத்திவிடலாம் என எண்ணினாள் கமலா
இவர்கள் நடவடிக்கையை ஒவ்வாமல் சக்தியின் அம்மா ஊருக்கு புறப்பட்டுவிட்டாள்
அக்கா மற்றும் தங்கைகள் அராஜகம் எல்லையை மீறியது
இவர்கள் தொல்லையை சகிக்க முடியாத சக்தி கொஞ்ம் கொஞ்மாக குடிக்க ஆரம்பித்தான் அதுவே நாளுக்கு நாள் அதிகமாகிவிடவே சரியாக வேலைக்கே போவதில்லை
சம்பளம் குறைய நேர்ந்தது
இனி இந்த மனுஷனை நம்பி பிரயோசனம் இல்லை இனிமே அந்த ஆளை யாரும் ஒன்னும் சொல்லாதீங்க குடிச்சி குடிச்சி சீக்கிரம் போய் தொலையட்டும் அப்போதான் உங்களுக்கெல்லாம் வழி பொறக்கும் என்றாள் கமலம்
ஆமாம் அவரு எப்போ மண்டைய போடுறது அதுவரைக்கும் காத்திருந்தா நாங்க பாதி கெழவியா ஆயிடுவோம் அப்புரம் எங்கள எவன் கட்டுவான்
என்றாள் நடுவில் இருப்பவள்
அக்காதங்கைகள் மூன்று பேரும் ஒருவருக்கொருவர் சலித்துக்கொண்டார்கள்
தண்ணீர் குழாய் அடியில் இரண்டு பொம்பளைங்க பேசிக்கொண்டதை உன்னிப்பாக கவனத்தை அவர்கள் பக்கம் திருப்பி கதைகளை கேட்டார்கள்
அதில் ஒருத்தி "என் குடிகார கணவன் சர்வீஸ்ல இருக்கும் போதே மண்டையை போட்டதால எனக்கு பென்ஷனும் வருது வேலையும் கொடுத்தார்கள் அதைவச்சிதான் பொண்ண கட்டி கொடுத்தேன்; பையன்களும் மேல் படிப்பு படிக்கவும் முடிஞ்சது; அவரு உயிரோட இருந்து குடியை குடிச்சிக்கிட்டே இருந்திருந்தா என் பிள்ளைங்க என்ன கதி ஆகி இருக்குமோ தெரியாது கொஞ்சம் நெனைச்சி பாத்தா பயங்கரமா இருந்தது" என்றாள்
அந்த கதையை கேட்டுவிட்டு வீட்டுக்கு போனதும் தாம் கேட்ட சங்கதியை அக்கா கமலம் காதில் ஓதினார்கள்
சிலநாட்கள் ஓடின அதன்பின் இரண்டாவது தங்கை யாருக்கும் தெரியாமல் மதிய சாப்பாட்டில் பாஷானத்தை கலந்து விட்டு ஒன்றும் தெரியாதவள் போல் இருந்துக்கொண்டாள்
மதிய சாப்பாட்டு டப்பாவை திறந்து சக்தியும் உண்டுவிட்டான் மது அருந்தி இருந்ததால் பாஷான நாற்றம் ஏதும் அவனுக்கு தென்படவில்லை ஒரு ஒருமணி நேரம் ஓய்வு பெற்றுவிட்டு வேலையை ஆரம்பிக்க போகும் வேளையில் மயக்கம் வர தொப்பென்று கீழே விழுந்துவிட்டான் கூட வேலை செய்தவர்கள் தூக்கி அருகில் இருந்த மரநிழலில் மரத்தில் சாய்ந்தபடி உக்கார வைக்கும் போது வாய்வழியாக நுரையும் ரத்தமும் கலந்து வெளிவரவே சகநண்பர்கள் தண்டவாளத்தில் பூச்சி பொட்டுகள் இருந்து தீண்டியிருக்கலாம் என எண்ணி வைதியரிடம் கொண்டுபோனார்கள் வைதியர் சோதித்து பார்த்துவிட்டு
"இது பூச்சிகள் விஷமல்ல சாப்பாட்டில் விஷம் கலக்கப்பட்டு இருந்திருக்கிறது இவர் போதையில் எதுவும் தெரியாமல் உண்டிருக்கிறார் என தெரிகிறது விஷ முறிவு மருந்து கொடுத் திருக் கிறேன் சரியாகிவிடும்" என்றார் வைதியர்
சக்தி மயக்கத்தில் இருந்ததால் வைதியரும் நண்பர்களும் பேசிக்கொண்டிருந்தது தெரியாது நண்பரில் ஒருவர் சக்தியின் வீட்டுக்குச் சென்று அவன் மனைவியிடம் நடந்ததை கூற•••
கமலம் திகைத்துப்போய் நின்றாள்
அவளை ஒரு ஆட்டோவில் அமர்த்தி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்கள் அங்கே சக்திக்கு சுய நினைவு திரும்பாதிருந்ததனால் வருவது யார் போவது யார் என்று தெரியாமல் கிடந்தான்
கமலம் யோசிக்க தொடங்கினாள்
" மதிய சாப்பாடு நான் கொடுக்க வில்லை பிறகு யார் கொடுத்து அனுப்பியிருப்பாங்க" என்று
"நம்ம தங்கச்சிங்க ரெண்டு பேர்ல எவளோ ஒருத்தி இதை செய்திருகக்கூடும்
இவளுங்கள கேட்கப்போயி பொக்கையால போச்சி பொரிமாவு என்ற கதையாகிவிடுமே என்று யோசித்தாள் இவளுங்களா சொல்றாலுங்களா பார்ப்போம் " என்று அமைதிகாத்தாள்
"மத்தியான சாப்பாட்டுல வெஷம் வச்சி அனுப்பி இருக்கிறாளே அவளெல்லாம் ஒரு பொம்பளையா இப்படியே விட்டுவச்சா இருக்கிறவளுங்க கத்துக்க மாட்டாளுங்கன்னு என்ன நிச்சயம் என நினைத்த வாடகைக்கு வீடு கொடுத்த வீட்டுக்காரம்மா வந்து வீட்டை காலிபண்ண சொல்லிட்டாங்க"
என்னடா இது கிணறு வெட்டப்போயி பூதம் புறப்பட்டாப்போல ஆயிடுச்சே என கமலம் திகைத்து போய் நின்றாள்
" அப்போ நீங்க ரெண்டு பேரும் ஒன்னு பண்ணுங்க ஊருக்கு பொறப்பட்டு போயிடுங்க கூடிய சீக்கிறத்தில நான் ஒரு வழி பண்ணிடுறேன் அதுக்கப்புரம் சந்திக்கலா இப்போ நாம பேசிக்கிட்டது ரகசியமாவே இருக்கட்டும் எங்கேயாச்சும் மூச்சி விட்டீங்கன்னா அப்புரம் தங்கச்சிங்கன்னுகூட பாக்கமாட்டேன்"
"இல்லக்கா எங்கள நம்புங்க பெத்த அப்பா அம்மாவைவிட உங்களத்தான் நாங்க ரெண்டு பேரும் மலைபோல நெனைச்சிக்கிட்டு இருக்கோம் டிக்கட்ட புக் பண்ணச்சொல்லுங்க"
தங்கைகள் புரப்பட்டுவிட்டார்கள் வீட்டை காலி பண்ணி வேறு இடம் வந்து ஒருமாசத்துக்கு மேல ஆயிடுச்சி ஓருமாதம் கழித்து கணவன் மேல பாசத்தால்மெழுகினாள் அக்கம் பக்கத்தவர் மெச்சும்படிக்கு புகழ்ந்து பேசினாள்
ஒருநாள் ஒரு தெரிஞ்ச பையனிடம் பணத்தை கொடுத்து மதுசரக்கு வாங்கிவரச்சொல்லி கணவனிடம் சரக்கை கொடுத்தாள்
சக்தி தலைகால் தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டான் நள்ளிரவு இருக்கும்
அவனது உயிர்நிலையில்
அதாவது மறைவிடத்தில் பலமாக இரண்டு மூனு உதைவிட்டாள்
சக்திமுற்று பெற்றே விட்டான் அது தெரிந்ததும் ஒன்றும் அறியா தவளப்போல இருந்துக் கொண்டாள்
காலையில் டீ போட்டு குடிக்க எழுப்புவது போல் பாவனை காட்டினாள் பின் "ஐயோ மாமா மாமா" என்று அலரல் சத்தம்
புது இடம் புதிய உரவுகள் நண்பிகள் அழுது புலம்பிகாட்டினாள்
சக்தி வேலை செய்த இடத்தில் விஷயம் அறிந்து இருதி சடங்கிற்காக மூவாயிரம் ரூபாயை கொடுத்தார்கள்
"வீட்டில் நாங்கள் எந்த சச்சரவும் இல்லாமல் சந்தோஷமாகத்தான் இருந்தோம் ஆனால் அவருக்கு எப்போவாவது வயிற்றுவலி வரும் வலி தாங்க முடியாமல் தாம் செய்வது இன்னது என்று அவருக்கே தெரியாமல் செய்வார் ஆனா அவரு விஷத்த தின்னுவாருன்னு நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை"
"பாவம் அந்த வலி தாள முடியாமல் இப்படி செஞ்சிக்கிட்டாரே நான் ஒண்டிகட்டையா என்ன பண்ணுவேன்"
யூனியன் காரருங்க அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் செய்து தருவாங்க உங்களுக்கு அவரோட வேலை கிடைக்கவும் ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காங்க இப்படியெல்லாம் ஆகனுமுன்னு இருந்திருக்கு ஆயிடுச்சி வருந்துவதாலே என்ன ஆகப்போகிறது என்று சக்தியோட கூட வேலை பார்த்தவங்க ஆறுதல் கூறினாங்க
சக்தியோட செட்டில்மெண்டு பணம் சர்வீசுக்கு தகுந்தார் போல் குறைவாகத்தான் கிடைத்தது கமலாவின் வங்கியில் சேர்ந்தது பென்ஷனும் கிடைக்க ஆயிட்டது வேலையும் போட்டு கோடுக்கப்பட்டது
சக்தியின் அம்மா காலமாகிய சேதி கமலாவுக்கு கிடைக்க ஊருக்குபோய் ஈம சடங்குகளையெல்லாம் செய்துவிட்டு வந்தாள் கமலம்
அதே கையோடு தங்கைகள் திருமணத்திற்கும் உதவினாள் அதன் பின்
கூடக்கூடாதவரோடு கூடி தீய வழியையும் தேடிக்கொண்டாள்; குடிக்கவும் கற்றுக்கொண்டாள்; குடிகார பெண்களோடும் மற்றும் ஆண்களோடு கூடி மதுபான விடுதிக்கெல்லாம் செல்வது; விதவிதமான விலை உயர்ந்த ஆடைகளை அணிவது; என்னிலும் அழகியுண்டோ என்றபடி உடையணிந்து அடுத்தவரோடு ஏட்டிக்கு போட்டியாக நடப்பதுமாக மாறியபடி ;
ஒருநாள் வேலைக்கு புறப்பட பேரூந்தை பிடிக்க தவறி கீழே விழ சக்கரம் தலையில் ஏறி அதே இடத்தில் உயிரைவிட்டாள்
அவளின் கணக்கு வழக்கு பார்க்கப்பட்டு ஒன்றுவிடாமல் எல்லாம் குழந்தையின் பேருக்கு மாற்றப்பட்டுவிட்டது
குழந்தை மேஜர் ஆனதும் அவளின் வேலையை தருவதாக எழுதப்பட்டுவிட்டது
குழந்தையின் சித்திமார்கள்
சின்னவள் வாழாவெட்டி யாகி விட்டாள் நடுளவள் மரம் சாய்ந்து பாதிகால் உடைய கட்டைப்போட்டு நடக்கலானாள்
பையன் விபரம் அறிந்து செயல்பட முனைந்தான் சக்திக்கு நெறுங்கியவர்கள் சிறுவனுக்கு புத்திமதிகளை உரைத்தனர் அதன்படி யாரையும் தன்னோடு சேர்த்துக்கொள்ளாமல் வாழ்க்கையை ஆரம்பித்து
"உரிமைக்காரன்" ஆனான்
கடவுள் இருக்கிறான் சத்தியம் பாராமகமாய் இருந்துவிட வில்லை
சக்தியின் ரத்தத்திற்கு ரத்தமான மகனுக்கே அவன் உழைப்பு வந்து சேரவேண்டும் என்பது விதி
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி