எப்படி நீ
கருங்குயிலை
பாட வைத்து
கடலலையை
ஆட வைத்து
தென்றலை
சிரிக்க வைத்து
மலையருவியை
அழ வைத்து
எனக்குள்ளே
உன்னை வைத்து
கனவுலகில் எனை
மிதக்க வைத்த
அந்த வித்தகன்
உனக்குள்ளே
யாரை வைத்தான்
என்றே தெரியாத
புதிருக்கு விடை
தேட
குயிலாய் பாடியே
கடலலையாய்
ஆடினாய்
என் கனவில்
தென்றலாய்
சிரிக்க முடியாது
மலையருவியாய்
கண்ணீர்
உனக்குள்ளே
நான் இல்லை
என்று தெரிந்த
பின்னே
என்னை நானே
கேட்டுக்
கொண்டேன்
எனக்குள் மட்டும்
எப்படி நீ ?
#sof_sekar

