பிறை ஊஞ்சல்

பனி சிந்தும் முன்னிரவு
மெல்லத் தழுவும் குளிர்போர்த்தி
சிறகின்றிப் பறக்கிறோம்

கைகள் கோர்த்து
ஒளிர்பிறை ஊஞ்சலில் அமர்ந்து
வானமெங்கும் முன்னும் பின்னுமாய்
அசைந்து சிலிர்க்கிறோம்

இரவு விளக்காய்
வின்மீன்கள் கண்சிமிட்ட
தோள்சாய்ந்து வெதுவெதுப்பில்
சுகம் பருகிக் களிக்கின்றோம்

முடிவிலியாய் இரவுநீள
நிழலோவிய முகம் பார்த்து
முத்தத்தின் வகையறியும்
முயற்சியில் ஜெயிக்கிறோம்

இந்த ஜென்மம்
இருபது நூற்றாண்டு
நீளும் வரம்கேட்டு
தவங்கள் செய்கிறோம்

இதோ
காதல் மந்திரம்
காதில் கேட்கிறது
பிரபஞ்சம் நம்மை
வாழ்த்திப் பாடுகிறது !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (5-Aug-17, 8:29 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 116

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே