காதல் - அழகி என் காதலி , கர்வி அல்லள்

பெண்ணே உந்தன் விழிப்பார்வை
என் பார்வையில் கலந்தபோது
நம் காதல் உருவானது
காதல் உருவான பின்னே
உந்தன் குவிந்த செவ்வாயும்
மெல்ல திறந்து முத்து சரமென்ன
மெல்லிய சிரிப்புதிர்க்க உன்னில்
ஓர் கர்வம் உன்னை அறியாமலே
வெளி வந்து நிற்பதை -உந்தன்
முகம் காட்டி கொடுத்து விட்டது
" என் அழகிற்கு நீ இன்றுமுதல்
என்றும் என் அடிமைதான் " என்று
உன் முகம் சொன்னதை நான்
அறிந்துகொண்டேன் , என்று நான்
எண்ணிய அத்தருணம் , என்னருகே
அவள் வந்து மெல்ல தன் வாய்திறந்து
என் காதில் வந்து செய்தி ஒன்று சொன்னாள்
'அன்பே இப்போது சொல்கின்றேன் கேளுங்கள்
உம்மை நான் காதலனாய் அடைய
என்ன தவம் செய்தேனோ முன் பிறவியில்
நான் அறியேன்; என்னை ஆட்கொண்ட என்
காதல் தெய்வம் நீ தான் அன்பே இனி
உந்தன் காதல் அடிமை நான், அறிந்திடுவாய்
அன்பே' என்றாள் .
நான் நினைத்தது போல் அவள் தன் அழகின்
கர்வி அல்ல ,நான் தான் இதை அறியாது
அவள் சிரிப்பை தவறாக எடைபோட்டேன் என்று
உணர்ந்தேன்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Aug-17, 8:34 pm)
பார்வை : 144

மேலே