நட்பு இலக்கணம்

உணவோடு இனைந்த
உப்பு
நம் நட்பு
ஒவ்வொரு முறை
காணும் நேரம்
உதட்டில் உதிக்கும்
சிரிப்பு
ஈடாகுமோ பதுக்கி
வைத்திருக்கும்
இருப்பு
என்னை காண
உன்னை தேட
உன்னை காண
என்னை தேடுவது
நம் வீட்டாரின்
பொழப்பு
பொய்த்தது இல்லை
எப்பொழுதும்
அவர்களின் கணிப்பு
என்னோடு நீ
நடந்தால்
வெய்யிலுக்கு வெறுப்பு
நம் நிழலுக்கோ
வியப்பு
சுவை மிகுந்த
சம்பவங்களின்
தொகுப்பு
இந்நாளில் நினைவு
கூருவதே
இதன் தனி சிறப்பு!
#sof_sekar
(நட்புகளுக்கு சமர்ப்பணம்)