தனிமை
தனிமை அது
கொடுமை ...
அடர்ந்த காட்டிலே
ஆடம்பரமாய் நின்று
தனியாய் நின்றால்..
கூட்டுக்குடும்பத்தில்
குதூகலமாய் வாழ்ந்து
தனியே வாழும்
தனிமை அது
கொடுமை ...
காய்ச்சலில் புரண்டு
படுத்து ...
தண்ணீர் கூட
யாருமின்றி இருக்கும்
நிலை .. அந்த
தனிமை அது
கொடுமை ...
ஆறாய் பெருகும்
எண்ணமெல்லாம்
விக்கல் போன்று
சிக்கி தவிக்கும் ..!
தனிமை அது
வேண்டாமென..
தனிமை அது
கருமை ...
கீதமிலா ஓலம்
உள்ளம் இசைக்கும் ..ஓர்
ஒளியை தேடியே
காத்திருக்கும் ...!