சுதந்திர நம் நாடு

நம் நாடு சுதந்திரம் பெற்று
ஏழு பத்து வருடங்கள் பூர்த்தி
பல முன்னேற்றங்கள் கண்டோம்
இன்னும் கண்டுகொண்டே இருக்கின்றோம்
இல்லை என்று கூறவில்லை
விண் வெளி ஆராய்ச்சியில்
முன்னணியில் நிற்கின்றோம்
நாளை சந்திர மண்டலத்திற்கும்
நம் விண் கலத்தில் நம்மவர்
பாதம் வைத்திடுவார்
இல்லையென்று கூறவில்லையே ...............


ஆனால் நாடு இன்னும்
சமத்துவம் காணவில்லையே
எளியோர் இன்னும் எளியோராய் தான்
வாழ்ந்து கொண்டிருக்கின்றார்
ஜாதி பூசல்கள் ஓயவில்லை
மதப் பூசல்கள் ......கேட்டகவேண்டாம்
பெண்கள் இன்றும் ஆணிற்கு
இங்கு அடிமைத்தான்..............
இதை எதிர்த்து பெண்கள்
இப்போதெல்லாம் குரல் எழுப்புகின்றார்
இல்லை என்று கூறவில்லை
ஆணும் பெண்ணும் சமம் என்றால்
அதற்கு அர்த்தம் இன்னும் இங்கு
பலருக்கும் புரியவில்லையே !

பேசும் மொழி கொண்டு
பாயும் நதி கொண்டு இன்னும்
உண்ணும் உணவு, உடை கொண்டு
நாட்டை பிரித்தது போதும்

நதிகளால் இனின் இணைந்திடுவோம்
மொழிகளால் நட்பு வளர்ப்போம்
நாமெல்லாம் ஒரு தாய் மக்கள் -ஆம்
இந்த பாரத தாயின் மக்கள் என்று நினைத்து
ஒன்றாய் வாழ பழகுவோம் -நம்மை காக்க
நம் நாட்டையும் காக்க
நம் முன்னோர்கள் முயன்று
நமக்கு வாங்கி தந்த சுதந்திர நாடு இது
இனியும் அன்னியர்க்கால்கள் இதில்
பட்டுவிடாமல் காத்து நிற்போம்

வாழ்க சுதந்திர நம் நாடு
வளர்க இதன் எழில்கள் எல்லாம்
வாழ்க இதன் நன் மக்கள் எல்லாம்
எழில் போங்க வளம் பெற்று என்றும்
சுதந்திரமாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Aug-17, 2:51 pm)
பார்வை : 94

மேலே