வேண்டும் மக்களுக்கான சுதந்திரம் - சி எம் ஜேசு

வேண்டும்
மக்களுக்கான சுதந்திரம்

நடக்கும் பாதையை
முடக்கா கடை இருந்தால்
அது மக்களுக்கான சுதந்திரம்

மடக்கும் விதிகளால்
முடங்கா பணி நிகழுமாகில்
அதுவே மக்களின் சுதந்திரம்

கிடக்கும் குப்பைகளுக்கு
குட்பை சொல்லும் பணியாள் இருந்தால்
அதுவே தூய்மைக்கான சுதந்திரம்

அருகிருக்கும் வீட்டுக்கு செல்ல
அனுமதித்த பாதை சமைத்தால்
அதுவே அவ்ஊருக்கான சுதந்திரம்

இலவசங்கள் வழங்கும் போது
தள்ளு முள்ளு போக்கு வந்து
தடியடி நிகழாமல் இருந்தால் அதுவே
நல் திட்டத்திற்கான சுதந்திரம்

வேலையற்ற நெஞ்சங்கள்
வேதனைகளை களைய
நாடு நன்மைபெறும் பணி தந்தால்
அதுவே பசுமை நிறைக்கும் சுதந்திரம்

நானெனும் அகந்தையும்
நன்மையற்ற தலைமையும் இருந்தால்
உலகுக்கு அதுவே வீணான சுதந்திரம்

சிந்தைகளில் நிறைப்போம்
மந்தைகளாகி போகாமல்
உயர்ந்து பட்டொளி வீசும்
தேசியம் வளர்ப்போம் ஒரே மக்களாகி

ஒரே இன மன நிற சாதி சமயம் காணும்
புதிய அன்பிய நெறி வளர்ப்போம்

வந்தே மாதரம்

எழுதியவர் : சி . எம் . ஜேசு (15-Aug-17, 2:24 pm)
பார்வை : 201

மேலே