தலைமை ஆசிரியை திருமதி ராஜராஜேஸ்வரி

திருச்சி மாநகராட்சி உள்ள நடுநிலைப்பள்ளியில் 2009 -ல் பள்ளியின் தலைமை ஆசிரியராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார் திருமதி ராஜராஜேஸ்வரி அவர்கள்.

தொடக்கப்பள்ளியாக தொடங்கப்பட்ட பள்ளிக்கூடம் 1959 -ஆம் ஆண்டு
நடுநிலைப்பள்ளியாக உயர்வு பெற்றது. நடுநிலைப்பள்ளியில்
ஐநூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவியர் கல்வி பயின்றனர்.

கல்வியின் தரமும் சுகாதார சீர்கேடுகளும் மேலோங்கி நின்றது.
தனியார் பள்ளி மாணவர்கள் செயல்பாடுகளும் ஆங்கில வழி கற்றலும் பெற்றோர்களை கவர்ந்தது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளை நிராகரித்து ஆங்கில வழி கல்வியில் நாட்டம் கொண்டனர்.

தலைமை ஆசிரியர் கல்வியின் தரத்திலும் சுகாதார சீர்கேட்டிலும்
உள்ள குறைபாடுகளை கண்டறிந்தார். ஐநூற்றுக்கு மேற்பட்ட
மாணவர்கள் படித்த பள்ளியில்
வெறும் ஐம்பது பேர் மட்டும் கல்வி பயிலும் நிலை கண்டு கவலையுற்றார்.

நம்மால் முடியுமா என்று மனத்தளர்வு
அடையாமல் ,முடியும் என்று முழு நம்பிக்கையோடு முயற்சி செய்தால்
அதுவே மிக வலிமையாக இருக்கும்
என்று கருதினார். பள்ளி ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்
செய்து செயலாற்ற வேண்டிய கடமையும் கல்வி ஏற்படுத்த வேண்டிய மாற்றத்தையும் புரியவைத்தார் .

எல்லோர் ஒத்துழைப்புடன் பள்ளி
சுற்றியுள்ள பகுதிகளில் மற்றும்
கிராம புற மக்களின் பகுதிக்கு
சென்று அரசு பள்ளியில் வகுத்துள்ள திட்டங்களையும் கூறி மக்கள்
கருத்தையும் கேட்டு கொண்டனர்.

பள்ளியில் வாளகம் மற்றும் வகுப்பறை சீர் செய்யப்பட்டு வர்ணம்
பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி
தந்தது. கழிப்பறை வசதி மற்றும்
மாணவர்கள் துணையுடன் தூய்மை
பாரமரித்தல்,சுகாதாரத்தை பற்றி
விழிப்புணர்வு ஆகியவை சிறப்பாக
செயலாற்ற தொடங்கியது.

2013 ஆம் ஆண்டு முதலாம் வகுப்பில்
ஆங்கில வழி கல்வி அறிமுகம் செய்தனர். மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் என்ற எண்ணம் தோல்வியில் முடிந்தது.
சற்றும் மனம் தளராத அரசன் விக்கிரமாதித்தன் போல் தலைமை ஆசிரியர் பள்ளி மாணவர்களை கொண்டு அறிவியல் கண்காட்சியை
நடத்தினர்.அதில் பெற்றோர்களும்
பொதுமக்களும் கலந்து கொண்டனர்.அறிவியல் படைப்பு
குறித்து ஆங்கிலத்தில் பேசிய மாணவர்களை கண்டு வியப்பு அடைந்தனர் பெற்றோர்களும்
பொதுமக்களும் பெருமை பேசி
கொண்டு விடை பெற்றனர்.

ஆங்கில உரையாடல் பயிற்சி, யோகசனம்,எளிய கணக்கியல் முறை , நூலகம் மற்றும் உள்விளையாட்டு அரங்கமும் ,உயர்கல்வி முறை மேம்பாட்டு தரம் உயர்த்தப்பட்டது .கணினி பயிற்சி இணைய வழி கல்வி வசதியும் செய்யப்பட்டது.

மாணவ மாணவியர்களுக்கு என
பேச்சு போட்டி,எழுத்து போட்டி
ஒவியப்போட்டியில் பங்குபெற செய்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் கொடுத்து அவர்களை வழங்கி ஊக்குவித்தனர்.வீட்டுக்கு சென்ற
பிறகு எதாவது ஒரு விளையாட்டில்
விளையாடுமாறு தினமும் அறிவுறுத்தப்பட்டனர்.

மாணவ மாணவியர் கல்வி முறையிலும் மற்றும் சுய ஒழுக்கத்தை கண்ட பெற்றோர்கள் அரசு பள்ளியின் மீது புது நம்பிக்கை பிறந்தது.தனியார் பள்ளியை காட்டிலும் சிறப்பனதாக உணர்ந்தனர்.

பாடத்திட்டதையும் தாண்டி உலக நிகழ்வுகள்,அறிவியல் தகவல் ,கண்டுபிடிப்புகள்,பொது அறிவு என வழிநடத்தினர்.மாணவர்கள் ஆசிரியர்கள் இடைப்பட்ட வேறுபாட்டையும் பயத்தையும் போக்கினார்கள்.

திருமதி ராஜராஜேஸ்வரி கடந்தாண்டு அவருக்கு கொடுக்க பட்ட உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பதவியை தற்காலிகமாக ஏற்க மறுத்தார்.அவர் கூறிய கருத்து இதோ"பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து பள்ளி நிலைக்கு சென்ற பிறகு கொள்ளலாம்"என்றார்.

ஆசிரியர் ஆசிரியை அரசு உதவியை
எதிர்பாராமல் தங்கள் சொந்த பணங்களை பள்ளியின் வளர்ச்சிக்கு
உதவினர்.தங்கள் ஆர்பணிப்பு உடன்
பள்ளியின் நிலையை உயர்த்தினர்.
தலைமை ஆசிரியர் தன் சொந்த
பணம் நான்கு லட்சம் ரூபாய்
கணினி மற்றும் இணைய வழி கல்விக்கு தேவையான மேம்பாட்டு
செலவுக்கு செலவு செய்தார். கல்வியின் மீது அவர் கொண்ட பற்று பாராட்டுக்குரியது.அவரை வாழ்த்துகிறேன்.

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலில் தோன்றாமை நன்று.

சூர்யா.மா

எழுதியவர் : சூர்யா. மா (15-Aug-17, 10:09 pm)
சேர்த்தது : சூர்யா மா
பார்வை : 1341

மேலே