இமை மூடிய பார்வை

[] இமை மூடிய பார்வை...
---------------------------------------------------------------------
இமை மூடி -
விழித்திருந்தேன்..!
இமை மூடி சில
நினைவுகளை திறந்தேன்..!
இமை மூடி -
உறவை நினைந்தேன்..!
பறவை ஆனேன்..!
இமை மூடி -
நட்பை நினைந்தேன்..!
கவலையெனும்
தொப்பை குறைந்தேன்..!
இமை மூடி -
காதல் நினைந்தேன்..!
உயிரின்
வேர்கள் உனர்ந்தேன்..!
இமைகள் மூடினேன் -
பகலெனும் கானல் பொழுது இரவானது..!
அதிலே புதுப்புது
வெளிச்சங்கள் உருவானது..!
விஞ்ஞான உதவியின்றி
வியாழன் தொட்டு வந்தேன்
விண்வெளி சுற்றி வந்தேன்
இமைகள் மூடி...
இமைகள் மூடி கொண்டு
சக்கரங்கள் சுழல விட்டு
அகத்தில் சாலை செதுக்கி
ஆனந்த பயணம் செய்தேன்..!
இமை திறந்து படித்தது போதும்
இமை மூடி அனுபவி..!
எத்தனை சொன்னாலும் - யாராலும்
முழுதாய் சொல்ல இயலாத
அனுபவம் அது ...
ஏனென்றால் -
அதை சொல்ல மொழி உண்டு ..!
அம்மொழிக்கு ஒலி தான் இல்லை ...
[] யாழ் ..