இது பைத்தியங்களின் தளமா

இது என்ன பைத்தியங்களின்
தளமா...?

ஒருவர் நிலவை பிடுங்குகிறார்,

ஒருவர் வானத்தை போர்த்துகிறார்,

ஒருவர் கடலை குடிக்கிறார்,

ஒருவர் வானவிலில் வயலின் வாசிக்கிறார்,

ஒருவர் எரிமலையில் குளிர் காய்கிறார்,

ஒருவர் மின்னலில் பல் குத்துகிறார்,

ஒருவர் இடிப்பந்துகளை சிக்சர் அடிக்கிறார்,

ஒருவர் பூமிபத்தை கால் பந்து ஆடுகிறார்,

ஒருவர் பூவினில் பூகம்பம் பார்கிறார்,

ஒருவர் டம்ளரில் சுனாமி படைக்கிறார்,

ஒருவர் நுரைகளை காக்கைக்கு
இரைகள் செய்கிறார்,

ஒருவர் சூரியனில் டார்ச் அடிக்கிறார்,

இன்னொருவர் காற்றில் ஓடுகிறார்,

நானோ வேற்று கிரகத்தை
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன்...!!!

இது என்ன
பைத்தியங்களின் தளமா...??

ஆம்.....

எல்லோரும் அங்கீகரியுங்கள்...
இது நம்மை போல் ஓராயிரம் தமிழ் பைத்தியங்களின் இடம் என்று..!

எழுதியவர் : சுரேஷ் காந்தி (18-Aug-17, 1:11 am)
பார்வை : 725

மேலே