ஏங்கும் உயிர்

அருகில் பெற்றோர்
ஆறுதல் படுத்தத் தெரியாத தமையன்
இசைக்கும் அழுகை சத்தம்
ஈ நுழைவது கூடத் தெரியாமல்
உரைக்கும் பெரியவர்கள்
ஊர் முழுவதும் கூட்டம்
எனக்காக..
ஏங்கும் சில பேர்
ஐம்பதைக் கூடத் தாண்டவில்லை
ஒவ்வாமையோடு வளர்ந்து
ஓங்கிய புகழ் பெற்று
இஃகு கிடக்கிறேன் உயிரற்று.......

எழுதியவர் : ப்ரியா சக்திவேல் (22-Jul-11, 4:19 pm)
சேர்த்தது : priya sakthivel
Tanglish : yeengum uyir
பார்வை : 326

மேலே