காதல்
அந்தப் பக்கம் நான் போனபோது
அவள் என் பார்வையில்!....... -என்
விழிகள் அவள் விழிகளோடு மோத துடிக்க
அவளும் அப்படித்தான் நினைத்தாளோ,
அந்த பக்கம் நான் போக என்னை அவள் பார்க்க
என் கண்களோடு அவள் கண்கள் உறவாட
காதல் மலர்ந்தது கண்கள் உறவாடலில் ,
என் பார்வை கள்ளப் பார்வையோ என்று
நான் எண்ண , அவளும் அப்படித்தான் நினைத்தாளோ !
எப்படி இருந்தால் என்ன-
இது இருவரை சேர்த்து வைத்த பார்வை
சங்க கால களவியல் காதலாகுமோ
என்ன என்ன பார்வைகளோ -
கள்ளவிழி பார்வை........................
எங்களை சேர்த்துவைத்த காதல் பார்வை !
கண்களே ......இந்த இரு கண்களும் (காதலர்)
உங்களுக்கு நன்றி சொல்லலாமோ !