காதல்

உன்னைப் பார்த்தேன்
நீயும் என்னைப் பார்த்தாய்
என்னை நீ காதலிப்பாயா
என்று கேட்டுவிட்டேன்
அதைக் கேட்டு நீ
கண்கள் மூடி
மௌனத்தில் ஆழ்ந்துவிட்டாய்
அப்போதும் உன் அழகு
என் மனதை தொட்டது
மூடிய உன் விழிகள்
தாமரை மொட்டோ என்று வியந்தேன்
இவ்விழிகள் தாமரைபோல் அலர்ந்தால்
பட்டாம்பூச்சி இறக்கைகள் போல்
இரப்பைகள் மூடி திறந்தால்
உன் அசையும் கண்கள்
ஆயிரம் கதைகள் பேசுமடி
அப்போது எந்தன் பார்வையை ஏற்று
என்னை உன் காதலனாய்
ஏற்றுக் கொள்ளுமடி
மூடிய சிறிய உன் செம்பவள வாய்
காதல் நிஷ்ட்டையில் நீ இருக்கிறாய்
என்று சொல்லாமல் சொல்ல
அது திறந்து என்னுடன்
காதல் மொழி எப்போது பேசும் என்று
நான் எண்ணி இருக்கையில்
அந்த சிறு வாயில் ஒரு
மெல்லிய சலனம் கண்டேன்,உன்
மௌனம் எனக்கு அஞ்சேல்,
'நான் உன் காதலை ஏற்கிறேன்'
என்று சொல்லியதோ என்று நினைத்தேன்

போதுமடி பெண்ணே
நீ பதுமையாய் இருந்தது போதுமடி
கண் திறப்பாய் என்னை பார்ப்பாய்
என் கோரிக்கையை ஏற்பாய்
வாய் திறவாய் தங்கச்சிலையே
'அன்பே வா' என்று அழைத்து
என்னை ஏற்பாய் என் காதல்
மனுவிற்கு அங்கீகாரம் தந்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Aug-17, 2:03 pm)
Tanglish : kaadhal
பார்வை : 125

மேலே