கண்கள் மூடிய கனவுகள்

அழுதுயரில் துயில்ந்தேனோ
இல்லை கனவினிலே அழுதேனோ

விரல்கள் வேண்டுது தலையணை
என் விழிநீர் துடைத்திடவே
மடிய தூண்டுது வலி என்னை
உனை மறந்திட நினைக்கையிலே

கனவில் கூட உனை அணைத்து
நான் வாழ்ந்த நினைவு எல்லாம்,
இனி கனவில் மட்டும் உனைக்காணும்
வேதனையில் திளைக்குதடா;

காலத்தின் கைப்பற்றி போனாயே...
இனி வரும் காலம் என் நிலை யாதடா??
"உனையன்றி துணையில்லை", என்றுரைத்த
ஞாபகங்கள் வதைக்குதடா .

காற்றை போல நம் காதல் என்றாயே
இன்று காற்றோடு கை கோர்த்து நடக்கிறேன்

வாழும் நாள் வரை துணை நீ என்றாயே
இங்கு நீ இல்லா வழிகள் நான் கடக்கிறேன்

இது எவரும் அறியா காதல் ஆதலால்,
தினம் சிரிப்பது போல் நடிக்கிறேன்.

மாலை சூடும் வேலையை நான்,
காலை மாலை கருத்தில் வைத்தேன் ;
மங்கள நாளில் மணமுடித்தோம் ,
நான் கனவினில் உன்னால் கரு தரித்தேன்....

பிரியும் நேரம் வந்தது எனவே
கண்கள் மூடிய எந்தன் கனவே!

எழுதியவர் : எளிநன் (19-Aug-17, 2:17 pm)
பார்வை : 1053

மேலே