கடவுளுக்கு ஒரு
ஐந்தறிவு உயிரினங்களுக்கு
இறைவன் படைத்த அன்பை
ஆரத்தழுவிக் கொள்ளும்
உள்ளம்.
ஆறறிவு மனிதயினம் தான்
படைத்த அறிவினால் அன்பை
புறம் தள்ளி தீண்டாமை விதைத்த
நல் உள்ளம்.
இறைவனுக்கு முன்னே எல்லா
உயிர்களும் சரி சமம் வாய்
பிதற்றல் உயர்ந்தோன் சொன்ன
மேடை பேச்சு.