இன்னுமொரு தாயாய் ---முஹம்மத் ஸர்பான்

ஒருத்தியின் புன்னகையில்
கண்ணீரை வடிகட்டி
சமாதிகளில் ஊற்றுகிறேன்
இமைகளின் உலகத்தில்
அவளுடைய ஞாபகங்கள்
சிலுவைகள் ஏந்துகின்றன
பார்வையெனும் ஆயுதம்
என் கால்களை வெட்டி
சப்பானியாய் மாற்றியது
உன் மாதாவிடாய்
காலங்களின் போது
என் வயிறு வலிக்கின்றது
ரேகையெனும் நூலகத்தில்
விரலெனும் புத்தகங்கள்
இயக்கமின்றி பரிதாபமானது
பூக்களின் தேர்வறையில்
பட்டாம் பூச்சி போல்
இமைகள் உறங்குகின்றது
நதிக்குள் தொலைந்த
மீன்களை போல
கனவுகள் தூரமாகிறது
சுவாச நரம்புகளில்
அவளுடைய ஓவியத்தை
உதிரங்கள் வரைகின்றது
என்னவள் சிரிக்கும்
போது குருடனுக்கும்
கவிதைகள் கிடைக்கிறது
கர்ப்பத்தை உடைத்து
நெடுதூரமாய் அவள்
கானலாகிப் போகிறாள்
பத்துத் திங்களின் பின்
அன்னையை தந்த
இறைவனவன்
இருபது வயதின் பின்
காதலியாய் ஒரு
குழந்தையாய் தந்தான்
அவளுடைய மழலைக்கு
என்னுயிரை விலையாக
எழுதி விட்டான் கடவுள்
விழிகளால் பேசுகிறாள்;
இதழ்களில் அழுகிறாள்;
நிலவாக சிரிக்கின்றாள்;
இதயமாய் ஆள்கிறாள்..,
எத்தனை தவங்கள்
செய்தேன் இறைவா!
இன்னுமொரு தாயாய்
என் வாழ்வில் காதலி
அன்பு மகளாய் அமைய....,

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (20-Aug-17, 7:31 pm)
பார்வை : 188

மேலே