நான் நானாக விரும்பினேன்
நான் கவிஞனாக விரும்பினேன்
கருத்தில் தெளிவில்லை
நான் பாடகனாக விரும்பினேன்
குரலில் வளமில்லை
நான் தலைவனாக விரும்பினேன்
வாழ்க்கையில் வசதியில்லை
இறுதியில் நான்
நானாக விரும்பினேன்
நடைபோட்டுக் கொண்டே இருக்கிறன்
நடுத்தெறுவில் நதியாக
நிற்கதியற்ற நிராயதபாணியாய்
என்னையே நான் தேடி