நிலைகள்

இன்பநிலை கண்டுவிட்டால்
எல்லையை நீ உணர்வாய்
துன்பநிலை அறிந்துவிட்டால்
வாழ்வதனை புரிந்து கொள்வாய்
ஏற்றநிலை எட்டிவிட்டால்
எல்லாமே உனதெனன்ணுவாய்
திருப்புமுனை நடந்து விட்டால்
இடறுகள் களையப்படுவாய்
ஒரு நிலை பெற்றுவிட்டால்
எல்லாமே சமமென்பாய்
நடுவு நிலைமை பார்த்துவிட்டால்
நடுவுக் கணக்கை தெளிந்து கொள்வாய்
பற்றற்ற நிலையடைந்துவிட்டால்
பரமனை நீ காண்பாய்
இயக்க நிலை நின்றுவிட்டால்
புரணமைதி பெற்றிடுவாய்