மெர்சல் அழகி

மெர்சல் அழகி....(Bull overlay... Fall in love)....
எதார்த்தமாய்.. பார்க்கிறேன் ..
எதிரே வருகிறாள் ...
ஒவ்வொரு கண்களும்..
இவளை ரசித்து இருக்கும்...
ஒவ்வொரு இதயமும்..
இவளிடம் விழுந்து இருக்கும்..
அவள் மனம் மயக்கும் அழகி...
என் மெர்சல் அழகி...
எதார்த்தமாய் நிற்கிறேன்..
என் அருகில் வருகிறாள் ....
மிரட்டும் அழகில்..
என்னை தூரத்துகிறாள்....
நான் ஜல்லிக்கட்டு காளை..
மிரண்டு நிற்கிறேன் ....
கண்கள் மூட மறுக்கிறேன் ...
அவள் மனம் மயக்கும் அழகி...
என் மெர்சல் அழகி...
எதார்த்தமாய் நிற்கிறேன் ...
என்னை தாண்டி செல்கிறாள் ....
ஏறுதழுவும் பெண்மகள்..
அவள் தாவணி வீசி...
என் திமில் அடக்கினாள்...
காதல் திரண்டது ..
கால்கள் நின்றது...
அவள் மனம் மயக்கும் அழகி...
என் மெர்சல் அழகி....
ஏதார்த்தமாய் சொன்னேன் ...
சற்று நில் என்று...
வெள்ளைமயில்...
கேட்டாள் என்னவென்று....
நெஞ்சை நிமிர்த்தி..
சொன்னேன் நான்...
உன்மேல் காதல் என்று...
கொஞ்சம் சிரித்து போகிறாள்...போ என்று....
அவள் மனம் மயக்கும் அழகி...
என் மெர்சல் அழகி.....
By bmh arun ....