ஒரு முறை
![](https://eluthu.com/images/loading.gif)
ஒரு முறை
நானாக நீ வேண்டும்..
நானாகவே நானும் வேண்டும்..
என் காதல் நீ பொழிய..
அதில் நான் நனைய வேண்டும்...
ஒரு முறை..
என் மௌனங்கள் நீ பேசவேண்டும்..
உன் வரிகள் நான் கேட்கவேண்டும்..
என் வலிகள் நீ உணர வேண்டும்..
அதன் மருந்தாய் நீயே வேண்டும்...
ஒரு முறை
உன்னை நான் பிரிய வேண்டும்
மறு கணமே என்னை நீ சேர வேண்டும்...
மாயங்கள் பல வேண்டும்..
மாயவியாய் நீ வேண்டும்...
ஒரு முறை..
பெண்ணாக நீ வேண்டும்
ஆணாக நான் வேண்டும்
என் பார்வை நான் வீச..
ஒரு நொடி நீ நாண வேண்டும்...
ஒரு முறை
உன் கைக்குள் என் முகம் வேண்டும்...
உலகமே அந்த நொடியில் உறைய வேண்டும்..
உன் கண்ணில் என் கனவு வேண்டும்..
உன் கனவாய் நான் மட்டும் வேண்டும்
ஒரு முறை
நாம் பருகும் தேநீர் பல முறை வேண்டும்...
முடிவில்லா பாதையில் ஒரு பயணம் வேண்டும்..
நிசப்தமான பூமி வேண்டும்..
உன் மௌனம் மட்டும் நான் கேட்க வேண்டும்..
ஒரு முறை
என் கரம் நீ பிடிக்க வேண்டும்..
உன் காதல் நீ உரைக்க வேண்டும்..
என் கண்ணில் நம் காதல் நீ உணர வேண்டும்..
ஒவ்வொரு முறையும் உன்னிடம் தோற்கும் நான் வேண்டும்..
என்னை தேற்றும் நீ வேண்டும்.....
ஒரேயொரு வாழ்வு வேண்டும்..
அதை உனக்காக வாழும் நான் வேண்டும்...