உன் இதயம் திறக்கும் சாவி
மறைந்திருக்கும் அர்த்தங்களை
திறக்கச் சொல்கிறது
உன் விழிகள்
நான் சாவியைத் தேடி
பயணிக்கிறேன்
என் இதயத்துக்குள்
ரகசியமாய்
புதைத்து வைத்துள்ளாய்
உன் கனவு விதைகளை
நீரூற்றிவிட்டு வாவென்கிறாய்
முகவரி சொல்லாமலே
ஆசைக் கடலில்
தொலைந்த உன் மனதை
தேடியெடுக்கச் சொல்கிறாய்
எனக்கு நீச்சல் தெரியாதென்று
முன்னமேயே
சொல்லியிருக்கவேண்டும் நான்
நீ தீபாவளியில்
காதல் திரியை
கொளுத்திக்கொண்டிருக்கிறாய்
அது பட்டாசல்ல
மெழுகுவர்த்தி என்று
தெரியாமல் !
@இளவெண்மணியன்