தீரா வேட்கை

படம் பார்த்துக் கவிசொன்னேன்

போராளி ஒருவனது சிந்த னைகள்
போகாமற் காற்றினிலே நிலைத்தி ருக்கும் !
தீராத வேட்கையினோ டிருக்கும் சிந்தை
திண்ணமுட னதையேற்று வழிந டத்தும் !
வீராதி வீரரெலாம் இறப்ப தில்லை
வித்தகர்கள் ஒருபொழுதும் மாள்வ தில்லை !
ஆராத சினமில்லை என்ற போதும்
அழியாத வேட்கைகள் அழிவ தில்லை !

மரணத்தை வெல்கின்ற வழியைத் தேடி
மக்களெலாம் ஏங்குகிறார் மரணம் நேரும்
தருணத்தில் அஞ்சாமை வெற்றி யாகும்
தம்முடல்தான் காலத்தால் பிறிந்திட் டாலும்
உரைக்கின்ற சொற்களிலும் கொள்கை யாலும்
உலகத்தில் வாழ்பவரே மரணம் வெல்வார்
இருக்கின்ற வரையுண்மை புரிவ தில்லை
இங்கெடுத்துச் சொன்னாலுங் கேட்ப தில்லை !

எழுதியவர் : விவேக்பாரதி (23-Aug-17, 12:16 am)
பார்வை : 85

மேலே