தேவையில்லை

யாருக்கும் நான்தேவை இல்லை - இன்று
யாழ்தேடி வாசிக்கும் ஆள்யாரும் இல்லை
போருக்குத் தாள்தேவை இல்லை - பொழுது
போக்கிற்குப் பாதேவை போதத்திற்கு இல்லை !

பூவுக்குத் தேன்தேவை இல்லை - இந்தப்
பூமிக்கு மென்மைகொள் மனம்தேவை இல்லை
ஆவுக்குக் கறிதேவை இல்லை - பெரும்
ஆழிக்குக் குட்டைநீர் அதுதேவை இல்லை !

தேவையில் லாதவை எல்லாம் - இந்தத்
தேசத்தில் தீமேவி எரியோடிச் செல்க
தேவைகள் மட்டுமே வாழ்க - என்றும்
தேவைக்கு வாழ்பவர் தேகங்கள் வாழ்க !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (23-Aug-17, 12:28 am)
பார்வை : 83

மேலே